'பிரஸ் மீட்டில்' கெஜ்ரிவால் கட்சி தலைவர் மீது முட்டை வீச்சு
லக்னோ: லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் மீது இளைஞர் ஒருவர் முட்டை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சைஃப் ஜாப்ரி என்ற வாலிபர் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டே குமார் மீது முட்டையை வீசினார். இதையடுத்து அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சியினர் சைஃபை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னாரைச் சேர்ந்த சைஃப் முலாயம் இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. குமார் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததால் தான் அவரை தாக்கியதாக சைஃப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குமார் போலீசில் புகார் கொடுக்காததால் சைஃப் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து குமார் கூறுகையில்,
இது போன்ற தாக்குதல்களால் தளர்ந்துவிட மாட்டோம். மாறாக அரசியலின் முகத்தை மாற்ற மேலும் வலுவோடு செயல்படுவோம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியைப் பார்த்து பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆடிப் போயுள்ளது. லோக் சபா தேர்தலில் அனைத்து கட்சிகளின் முக்கியத் தலைவர்களுக்கு எதிராக வலுவான போட்டியாளர்களை ஆம் ஆத்மி கட்சி நிறுத்தும் என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications