மேற்கு வங்க ஓட்டுச்சாவடியில் தொண்டர்களிடையே மோதல்- 10 பேர் காயம்- 3 பேர் கைது
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஓட்டுச் சாவடியில் வெவ்வேறு கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இன்று 5 தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனியாகவும், இடதுசாரியும், காங்கிரசும் இணைந்து போட்டியிடுகின்றன. இதில் ஒரு கோடிக்கும் மேல் வாக்காளர்கள் ஓட்டளிக்கின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள இரண்டு ஓட்டுச் சாவடிகளில் வாக்குப்பதிவின் போது கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மால்டாவில் 6 பேரும், மற்றொரு சம்பவத்தில் 4 பேரும் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி, மேற்கு வங்க இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவில் 39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications