யுவராஜ் சிங் வீட்டு கேட் கழன்று விழுந்து 8 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி
சன்டிகர்: ஹரியானாவில் உள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீட்டின் கேட் கழன்று விழுந்ததில் 8 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு வீடு உள்ளது. அந்த வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் புதுப்பிக்கும் பணயில் ஈடுபட்டிருந்த கட்டிடக் கூலித் தொழிலாளியின் மகன் குல்தீப்(8) கடந்த 19ம் தேதி அங்கு விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

குல்தீப் வீட்டின் கேட்டில் ஏறி விளையாடியுள்ளார். அப்போது எடை அதிகம் உள்ள கேட் கழன்று சிறுவன் மீது விழுந்ததில் அவர் உடல் நசுங்கி பலியானார். முன்னதாக கேட் விழுந்ததும் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கட்டிட வேலை நடந்து கொண்டிருப்பதால் கேட் ஒழுங்காக பொருத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர். சம்பவம் நடந்தபோது யுவராஜும், அவரது தாயும் வீட்டில் இல்லை.
யுவியும், அவரது தாயும் குருகிராமில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார்கள். சம்பவம் நடந்த வீடு யுவின் தாய் சப்னம் சிங்கின் பெயரில் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications