அசாம் சொகுசு ஹோட்டலில் 8 நாட்கள் தங்கிய ஷிண்டே, அதிருப்தி எம்.எல்.ஏக்கள்.. பில் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி : ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் 8 நாள் தங்குவதற்கு ரூ. 70 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்கும் முயற்சியில், மும்பையில் இருந்து வெளியேறி ஜூன் 22 முதல் மும்பையிலிருந்து 2,700 கிமீ தொலைவில் உள்ள கவுஹாத்தியில் உள்ள ஹோட்டலில் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்தனர்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கியதற்கான ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வாடகையாக ரூ. 70 லட்சம் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா குழப்பம்

மகாராஷ்டிரா குழப்பம்

மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே மீதான அதிருப்தியால் சிவசேனாவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் சில சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத் வழியாக அசாமுக்கு சென்று கவுஹாத்தியில் உள்ள ரேடிசன் ப்ளூ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கினர். சிவசேனா அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். உத்தவ் தாக்கரே அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் முயற்சிகள் பலிக்கவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் 20-வது முதல்வராக பாஜகவின் ஆதரவோடு பதவியேற்றார் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏவான ஏக்நாத் ஷிண்டே. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகப் பதவியேற்றார்.

 ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்

பா.ஜ.க ஆளும் மாநிலமான அசாம் தலைநகர் கவுஹாத்தியில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் தான் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கியிருந்தனர். இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அவருடைய ஆதரவு எம்.எல்ஏக்கள் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் 8 நாள் தங்குவதற்கு ரூ. 70 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 70 ரூம்கள்

70 ரூம்கள்

ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களுடன் சென்றவர்களுக்காக தங்குவதற்காக, ஓட்டலின் வெவ்வேறு தளங்களில் மொத்தம் 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று ஹோட்டலை காலி செய்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள், காலி செய்வதற்கு முன்பே தங்கள் பில்களை செட்டில் செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

70 லட்ச ரூபாய்?

70 லட்ச ரூபாய்?

8 நாட்கள் தங்கியதற்கு மொத்த பில் எவ்வளவு என்பது குறித்து ஹோட்டல் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றாலும், ரூ.68 முதல் 70 லட்சம் வரை செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கான மொத்த உணவு கட்டணம் சுமார் ரூ.22 லட்சம் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரேடிசன் ப்ளூ

ரேடிசன் ப்ளூ

ரேடிசன் ப்ளூ இணையதளத்தின்படி கவுஹாத்தி ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் உள்ள பல்வேறு வகையான அறைகளின் கட்டணங்கள் ஒவ்வொரு நாளும் மாறுபடும். உயர்ந்த அறைகளுக்கான வாடகை சுமார் ரூ.7,500 மற்றும் டீலக்ஸ் அறைகளுக்கு ரூ.8,500. ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு ரூ.8,400 வரை ஆகும். இந்த ஹோட்டலில் சுமார் 55 டீலக்ஸ் அறைகள் உள்ளன.

வேறு வசதிகளை பயன்படுத்தவில்லை

வேறு வசதிகளை பயன்படுத்தவில்லை

அறை வாடகை கட்டணத்திற்குட்பட்ட இலவசமாக கிடைக்கும் வசதிகளை மட்டுமே அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பயன்படுத்தினர் எனவும், ஸ்பா போன்ற கட்டணம் வசூலிக்கக்கூடிய வேறு எந்த வசதியையும் அவர்கள் பயன்படுத்தவில்லை என்றும் ஹோட்டல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+