For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதில் மேல் பூனையாக குஜராத் தேர்தல் முன்னணி நிலவரம்... விடாமல் விரட்டும் காங்கிரஸ்!

குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.,

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத்தில் பாஜக-வை தெறிக்க விடும் காங்கிரஸ்- வீடியோ

    டெல்லி : குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விடாமல் பின்தொடர்ந்து விரட்டி வருகிறது காங்கிரஸ் கட்சி. பாஜவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஏறத்தாழ 30 தொகுதிகள் முன்னிலையில் வித்தியாசம் நிலவுகிறது.

    குஜராத் சட்டசபை தேர்தலில் நொடிக்கு நொடி முன்னிலை நிலவரங்கள் மாறி வருகின்றன. மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது தொடங்கியுள்ளது. இதில் முதல்வர் விஜய் ரூபானி, ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் முன்னிலை பெற்றதாக முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தெரிந்தது.

    Election comission of India officially says that Congress is leading in Gujarat election

    ஆனால் அடுத்த வாக்குப்பெட்டியின் எண்ணிக்கையின் போது மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதே போன்று ஒவ்வொரு சுற்றுக்கும் முன்னிலை நிலவரம் மாறி வருகின்றன. ஊடகங்கள் அனைத்தும் குஜராத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரப்பூர் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாஜக 98 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும், காங்கிரஸ் கட்சி 73 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ட்ரைபல் கட்சி 2 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

    காங்கிரஸ், பாஜக இடையே அதிக வெற்றி வித்தியாசங்கள் இருக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்லி வந்த நிலையில் பாஜகவை விரட்டிக் கொண்டே பின் செல்கிறது காங்கிரஸ் கட்சி. இதனால் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என்பது தான் தற்போதைய நிலவரமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதன் மூலம் தெரிய வருகிறது.

    English summary
    Election comission of India officially says that Congress is leading in Gujarat election, BJP leads 17 whereas Congress leads 18 constituencies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X