பரம எதிரிகளை ஒன்றிணைத்த தேர்தல் ஆணையம்.. மம்தா – மா.கம்யூனிஸ்ட் கைகோர்ப்பு.. பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: தமிழத்தில் அதிமுக - திமுக எப்படியோ அப்படித்தான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்சும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும். பரம எதிரிகளாக காலம் காலமாக வலம் வருகின்றன. இப்படியான சூழலில் தற்போது இருவரும் ஒன்றாக கைகோர்க்க தயாராகி உள்ளன. குறிப்பாக மம்தா பானர்ஜியே இறங்கி சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க அரசியலில் கடந்த சில மாதங்களாகவே யாரும் எதிர்பாராத சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. பாஜக முதல் முதலாக ஆட்சியை பிடித்தது. மம்தா பானர்ஜியின் சட்டசபை தேர்தல் தோல்வி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருவது.

mamata banerjee CPIM election Commission

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டு இருப்பது. இவை அனைத்தும் கடந்த 4 மாதத்தில் மேற்கு வங்க அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வுகளாகும். இந்த வரிசையில் தான் தற்போது இன்னொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

மேற்கு வங்க அரசியலில் பரம எதிரிகளாக இருக்கும் மம்தா பானர்ஜி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக கைகோர்க்க தயாராகி உள்ளன. SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதிக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயாலளர் எம்ஏ பேபி, மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதினார்.

பொதுவாக இப்படியான கடிதத்ததிற்கு மம்தா பானர்ஜி பதிலளிப்பது இல்லை. ஆனால் இந்த முறை மம்தா பானர்ஜியே இறங்கி சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்ஏ பேபியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இருவரும் இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம், தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இடையே SIR விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதித்துள்ளனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது மேற்கு வங்க அரசியலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தேசிய அரசியலில் இருந்த மம்தா பானர்ஜி மாநில அரசியலுக்கு சென்றதற்கு முக்கிய காரணமே மேற்கு வங்கத்தில் தொடர்ந்து நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி தான். இந்த ஆட்சியின் மீதான கோபத்தால் தான் மம்தா பானர்ஜி 1997 ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தீவிரமாக செயல்படவில்லை என காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி அந்த கட்சியில் இருந்து மம்தா வெளியேறினார். தொடர்ந்து மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக 14 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி 2011ல் முதல் முறையாக ஆட்சியை பிடித்தார்.

அதன்பிறகு 2016, 2021ல் ஆட்சியை தக்க வைத்த மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கை பெரிய அளவில் சரித்தார். தற்போது 2026 சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி, பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துவிட்டு தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைகோர்க்க தயாராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+