தேர்தல் விதிமீறல்: கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: பாஜக அல்லது காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது கடவுளுக்கு துரோகம் செய்வது போல் என்று பேசிய ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2ம் தேதி ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடந்த தேர்தல் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், பாஜக அல்லது காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது கடவுளுக்கு துரோகம் செய்வது போல் என்று தெரிவித்தார்.

கெஜ்ரிவால் இவ்வாறு பேசியது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்று கூறி இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் நாளைக்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
தேர்தல் கூட்டங்களில் பேசுகையில் சாதி அல்லது சமூக உணவர்வுகளை தூண்டும் வகையில் பேசுவது தேர்தல் விதிமீறல் ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவால் கூட்டத்தில் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ சிடியையும் தேர்தல் ஆணையம் அவருக்கு அனுப்பி வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications