மோடி அலை இன்னும் ‘சுனாமி’யாக வீசிக் கொண்டு தான் இருக்கிறது... : அமித்ஷா
மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் வெற்றிகள் மூலம் மோடி அலை சுனாமியாக வீசிக் கொண்டு தான் இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அமித்ஷா.
கடந்த 15ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி, தேர்தல் நடைபெற்ற இரண்டு மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இத்தேர்தல் வெற்றி குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறுகையில்,
மக்கள் தீர்ப்பு...
இது ஒரு மாபெரும் வெற்றி. எங்கள் கட்சி தொண்டர்கள் உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர் எந்தவொரு சர்ச்சைக்கும் சிக்காதவர் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
அங்கீகாரமும், ஆதரவும்...
பிரதமர் மோடியின் அரசுக்கும் மக்கள் கொடுத்த அங்கீகாரம். மோடியின் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
3வது இடத்தில் காங்கிரஸ்...
அரியானாவில் 33 சதவீத ஓட்டுக்களும், மகாராஷ்ட்டிராவில் 28 சதவீத ஓட்டுக்களும் பெற்றுள்ளோம். காங்கிரஸ் கட்சி 3 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
காங். இல்லாத இந்தியா...
எங்களின் திட்டமான காங்கிரஸ் இல்லாத இந்தியா வரவேண்டும் என்பது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்.
ஆட்சி அமைப்போம்...
இரு மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம். சிவசேனாவுடனான உறவை நாங்கள் முறித்து கொள்ளவில்லை. இந்த உறவு முறிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
மோடி அலை...
மோடியின் அலை இன்னும் சுனாமியாக வீசிக்கொண்டு தான் இருக்கிறது. எதிர்கட்சியினர் தவறாக செய்தி பரப்புகின்றனர்.
விரைவில் முடிவு...
மகாராஷ்டிராவில் கூட்டணி பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும். இங்கு நிலையான ஆட்சி அமையும். யாரும் கவலைப்பட வேண்டாம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications