2 மாநில சட்டசபை தேர்தல்.. 51 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. பரபரப்பாக முடிந்தது மாபெரும் வாக்குப்பதிவு!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் இன்று நடக்க உள்ளது. அதேபோல் தமிழகத்தில் 2 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது.
இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. தமிழ்கத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடந்தது.
இதில் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மகாராஷ்டிரா தேர்தல் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகள் உள்ளது. இதில் 124-ல் சிவசேனா போட்டியிடுகிறது. 164 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதேபோல் இன்னொருபுறம் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது.

என்ன போட்டி
காங்கிரஸ் கட்சி 147 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் போட்டியிடுகிறது.4,28,43,635 பெண்கள் உட்பட 8,98,39,600 பேர் இந்த தேர்தலில் மகாராஷ்டிராவில் வாக்களிக்கிறார். மொத்தம் 96,661 வாக்குச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர்
மொத்தம் 3237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 6.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியை செய்தனர். 1,85,000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் மொத்தம் 55.33% வாக்குகள் பதிவானது.

ஹரியானா எப்படி
ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. 7 மணிக்கு தொடங்கும் தேர்தல் மாலை 6 மணிக்கு முடிந்தது. இங்கு பாஜகதான் ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேதான் பிரதான போட்டியாகும்.மொத்தம் 85 லட்சம் பெண்கள் உட்பட 1.83 கோடி வாக்காளர்கள் இங்கு உள்ளனர்.

எவ்வளவு
மொத்தம் 19578 வாக்குச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டது. மொத்தம் 3237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.3.8 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியை செய்தனர். 75000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் ஹரியானாவில் மொத்தம் 61.62% வாக்குகள் மட்டுமே பதிவானது.

நாங்குநேரி எப்படி
தமிழகத்தில், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எச். வசந்தகுமார். இவர் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்வானார். இதனால் தன்னுடைய நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடந்தது. நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், போட்டியிடுகிறார்.

தேர்தல் போட்டி
திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் களமிறக்கிவிடப்பட்டார். இங்கு மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. பாதுகாப்பிற்காக 800 போலீசார் நியமிக்கப்பட்டனர். இந்த தேர்தலில் இதுவரை 62% வாக்குகள் பதிவாகி உள்ளது.

விக்கிரவாண்டி எப்படி
விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த கே. ராதாமணி மரணமடைந்ததால் அந்தத் தொகுதி காலியாக இருக்கிறது. இதையடுத்து விக்கிரவாண்டியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர்.

எவ்வளவு பேர் இருக்கிறார்கள்
இங்கு மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 250 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக 7500 போலீசார் நியமிக்கப்பட்டனர். இன்று நடக்கும் தேர்தலுக்கான முடிவுகள் வரும் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 76% வாக்குகள் பதிவாகி உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications