பெண்கள் மேம்பாட்டுக்கு உதாரணமாக திகழ்கிறது தமிழகம் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
டெல்லி: பெண்கள் மேம்பாட்டுக்கு தமிழகம் சிறந்த உதாரணமாகத் திகழ்வதாக மத்திய வர்த்தகம், தொழில் துறை தனிப் பொறுப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழகம் பெண்கள் மேம்பாட்டுக்கான சிறந்த இடமாக எப்போதுமே திகழ்ந்து வருகிறது. நானும் இதில் பங்கு வகிக்கிறேன் என்று நினைக்கும்போது மிகுந்த பெருமையாக உள்ளது.

கல்வி நிறுனங்கள், மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், பெண்கள் மேம்பாட்டுக்கும் சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.
அந்த வகையில், நூற்றாண்டைக் கடந்துள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சிறந்த கல்விச் சூழலை மாணவிகளுக்கு உருவாக்கித் தருவதோடு, பெண்கள் மேம்பாட்டுக்கும் அடித்தளமிட்டு வருவது பாராட்டுக்குரியது" என்றார்.
பின்னர், விழாவில் கல்லூரியின் நூற்றாண்டு லோகோவை அறிமுகம் செய்துவைத்தார். விழாவில் பங்கேற்ற கல்லூரி முன்னாள் மாணவியும், தேசிய காவலர் பயிற்சி அகாடமியின் முதல் பெண் இயக்குநருமான அருணா பஹுகுனா பேசுகையில், "காவலர் பயிற்சி அகாடமியில் பயிற்சிக்காக வருபவர்களுக்கு நன்னெறிகளைக் கற்றுக்கொடுப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. எனவே, கல்லூரிகள் நன்னெறிகளைக் கற்றுக்கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications