நேற்று ஒரேநாளில் 10பேர் பலி: உ.பி.யில் மூளையழற்சி நோயால் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக உயர்வு
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் மூளையழற்சி நோய்க்கு நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூளையழற்சி நோயினால் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது,
கிழக்கு உத்தரபிரதேசத்தில் வாழும் மக்களை பாக்டீரியா கிருமிகளின் தொற்றால் ஏற்படும் என்சபேலிடிஸ் எனப்படும் மூளையழற்சி நோய் தாக்கி வருகிறது. தலைவலி, காய்ச்சல், சோர்வு, களைப்பு போன்றவையே இந்த நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள்.
இந்நோய் தீவிர நிலையை எட்டும்போது தசைவலிப்பு, இழுப்பு, உடல் நடுக்கம், நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இறுதியில் மரணம் உண்டாவதற்குரிய வாய்ப்புகள் அதிகம்.
உ.பி.மாநிலத்தில் இந்தாண்டு மட்டும் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்ட 1861 நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில், நேற்று மட்டும் 10 பேர் பலியானதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 188 மூளை அழற்சி நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைகிடமாக உள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications