காஷ்மீரில் ராணுவம்-லஷ்கர் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி
காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் ராணுவம் மற்றும் லஷ்கர் தீவிரவாதிகள் இடையே நடத்த கடும் மோதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் ராணுவம் மற்றும் லஷ்கர் தீவிரவாதிகள் இடையே நடத்த கடும் மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் அங்கு நடத்தப்பட்ட தேடுதலில் பந்திபோராவின் முக்கிய பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதி கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தொடர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர். இந்த தாக்குதலில் சமயங்களில் சில ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர். மேலும் இந்த தாக்குதல்கள் காரணமாக பொது மக்களும் பாதிக்கப்படுவதாக அடிக்கடி கூறப்பட்டது.

இதையடுத்து இதுபோன்ற திடீர் தாக்குதல்களில் பொதுமக்களை பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு பந்திபோரா பகுதியை ராணுவம் 'என்கவுண்டர் சோன்' என பெயரிட்டது. மேலும் இது போன்ற என்கவுண்டர் பகுதிகளில் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியது.
இதையடுத்து இன்று காலை அந்த பந்திபோரா பகுதியில் திடீரென்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக கொடுக்கப்பட்ட தகவலில் பேரில் முதலில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது பந்திபோராவின் 'ஹசன்' என்ற பகுதியில் தீவிரவாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் தீவிரவாதி அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ராணுவத்தின் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி லஷ்கர் குழுவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications