முடிவிற்கு வருகிறது நீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை.. கொலீஜியம் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு!
உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருக்கிறது.
Recommended Video

டெல்லி: உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசு இதை ஏற்கவில்லை.

இரண்டு மாதம் முன் உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் அமைப்பு அனுப்பிய நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் வழக்கம்.
ஆனால் அப்போது உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் பெயரை மட்டும் பரிந்துரையில் இருந்து நீக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அவரது பெயர் மூப்பின் அடிப்படையில் இப்போது வர கூடாது என்று கூறியுள்ளது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து விவாதம் நடத்த இரண்டு முறை கொலீஜியம் கூடி உள்ளது. கொலீஜியத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களும் கூடி, ஜோசப் நியமனம் குறித்து விவாதித்தார்கள். மத்திய அரசிடம் இரண்டு முறை அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால் மத்திய அரசு அவர் பெயரை வேண்டுமென்றே ஏற்கவில்லை. இந்தநிலையில் மூன்றாவது முறையாக அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருக்கிறது.
இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஹைகோர்ட் தலைமை நீதிபதி வினித் சரண் ஆகியோருடன் இவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications