ச்சமத்து.. அம்மா ஹேமாவுக்காக அனல் பறக்க பேச வரும் மகள் இஷா...!
Subscribe to Oneindia Tamil
மதுரா: பாஜக சார்பில் மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளார் அவரது மகளும், நடிகையுமான இஷா தியோல்.

நாளை அவர் கோவர்த்தன் என்ற பகுதியில் பிரசாரம் செய்யவுள்ளார். இதற்காக அவர் மதுரா வந்துள்ளார். தமிழகத்தைப் போலவே மதுராவிலும் ஏப்ரல் 24ம் தேதிதான் தேர்தல் நடைபெறவுள்ளது.
நான்கு முனைப் போட்டியில் ஹேமா சிக்கியுள்ளார். இங்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம் ஆகியவை போட்டியிடுகின்றன.
நாளை தனது தாயாருடன் சென்று பிரசாரம் மேற்கொள்கிறார் இஷா தியோல் என்று உள்ளூர் பாஜக தலைவர் டி.பி.கோயல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications