நான் உளறினாலும் கர்நாடக மக்கள் தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள்.. அலறும் அமித்ஷா
நான் தவறு செய்தாலும் கர்நாடகா மக்கள் தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: நான் தவறு செய்தாலும் கர்நாடகா மக்கள் தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 15 நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஊழல்வாதி எடியூரப்பா
அண்மையில் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அம்மாநில பாஜக தலைவரான எடியூரப்பாவை அருகில் வைத்துக் கொண்டே ஊழல் மிக்க அரசு எடியூரப்பா அரசு தான் என்றார்.

அமித்ஷா உளறல்
இது பாஜகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சித்தராமையா என கூறுவதற்கு பதிலாக எடியூரப்பா என கூறிவிட்டதாக பின்னர் சமாளித்தார் அமித்ஷா. ஆனால் அமித்ஷாவின் இந்த உளறலை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

வாய் தவறி கூறிவிட்டேன்
தங்களின் பிரச்சார வேலை மிச்சம் என்று கூறிய காங்கிரஸ் கட்சியினர், அமித்ஷா பேச்சை வைரலாக்கினர். இந்நிலையில் இன்று மைசூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் அமித்ஷா
கர்நாடகா ஊழல் விவகாரத்தில் சித்தராமையாவுக்கு பதில் எடியூரப்பா பெயரை வாய் தவறி கூறி விட்டேன் என்றார்.

தவறு செய்ய மாட்டார்கள்
நான் வாய் தவறி பேசியதால் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்ற அமித்ஷா, நான் தவறு செய்தாலும் கர்நாடக மக்கள் தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள் என ராகுலுக்கு கூறுகிறேன் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications