நாங்க இங்க மட்டுமல்ல...செவ்வாய் கிரகத்திலும் உதவுவோம்... அமைச்சர் சுஷ்மா 'பலே' பதில்
பூமியில் மட்டுமல்ல செவ்வாய் கிரகத்திலும் இந்தியர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் தூதரகம் மூலம் உதவுவோம் என்று அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லி: டிவிட்டரில் கிண்டலாக கேள்வி கேட்டவருக்கு, செவ்வாய் கிரகத்தில் இந்தியருக்கு பிரச்னையில் இருந்தாலும், அங்கு இந்தியதூதரகம் மூலம் உதவி செய்வோம் என, சுஷ்மா பதிலளித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் பரபரப்பாக செயல்படுகிறார். அதனை அறிந்துகொண்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள், சுஷ்மாவிடம் டிவிட்டர் மூலமாகவே உதவி கேட்டு வருகின்றனர்.

உடனே அமைச்சரின் உத்தரவின்பேரில், அவர்களுக்கு, இந்திய தூதரகம் மூலம் உதவி செய்யப்படுகிறது. இந்நிலையில் கரன் சைனி என்பவர், சுஷ்மாவின் டிவிட்டர் பக்கத்தில் " நான் செவ்வாய் கிரகத்தில் சிக்கியுள்ளேன். 987 நாளுக்கு முன்னர் மங்கள்யான் விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உணவு தீர்ந்து வருகிறது. அடுத்த மங்கள்யான் விண்கலம் எப்போது அனுப்பப்படும்" என்று கேட்டிருந்தார்.
Even if you are stuck on the Mars, Indian Embassy there will help you. https://t.co/Smg1oXKZXD
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 8, 2017
இதற்கு கொந்தளித்திருக்க வேண்டிய சுஷ்மா அமைதியாக பதில் அளித்துள்ளார் நகைச்சுவையோடு. "செவ்வாய் கிரகத்தில் நீங்கள் பிரச்னையில் சிக்கியிருந்தாலும், அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் உதவி செய்வோம்" என்று சுஷ்மா பதிலளித்துள்ளார்.
சுஷ்மாவின் பதிலை சுமார் 3500 பேர் ரீ டிவிட் செய்துள்ளனர். 6 ஆயிரம்பேர் லைக்ஸ் போட்டுள்ளனர். சைனிக்கு கண்டனங்கள் பெருகியுள்ளன. இது டிவிட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.












Click it and Unblock the Notifications