என் மனைவி கூட இப்படி கையை பிடித்தது இல்லை.. பொறாமையா இருக்கு சாரே.. பாஜக அமைச்சரை கலாய்த்த நெட்டிசன்
'என் மனைவி கூட இப்படி கையை பிடிச்சது இல்லை, பொறாமையா இருக்குது சார்' என்று பாஜக அமைச்சரை கலாய்த்து நெட்டிசன் ஒருவர் ட்விட் பதிவிட்டுள்ளார்.
ஹோகிமா: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை வரவேற்றபோது டெம்ஜெம் இம்னா அவரது கையை பிடித்து அழைத்து வந்தார். இதை வைத்து நெட்டிசன் ஒருவர் "எனது மனைவி கூட இப்படி எனது கைகளை பிடித்தது இல்லை. எனக்கு பொறாமையாக இருக்கிறது சார்" என்று பதிவிட அதற்கு தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் டெம்ஜெம் இம்னாவும் ரீப்ளே போட்டுள்ளது இணையத்தில் பரவி வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த மாநிலத்தில் உயர் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சராக இருப்பவர் டெம்ஜெம் இம்னா. வடகிழக்கு மக்களுக்கு உரிய பிரத்யேக முக அமைப்பு கொண்ட டெம்ஜென் இம்னா அலோங் தனது நகைச்சுவையான கருத்துக்களால் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர்.

நாகலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா
டெம்ஜென் இம்னா போடும் ஒவ்வொரு பதிவுகளும் இணையத்தில் ரசிக்க வைக்கும் படியாக இருக்கும். இதன் காரணமாக அவரது பதிவுகள் அனைத்தும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் டிரெண்டிங் ஆகும். நாகலாந்து மாநில பாஜக தலைவராகவும் இருக்கும் டெம்ஜென் இம்னா தற்போது தேர்தல் வேலைகளில் கடும் பிசியாக இருக்கிறார். அந்த மாநிலத்தில் வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், அனல் பறக்கும் பிரசாரம் அங்கு நடைபெற்று வருகிறது.

நெட்டிசன்கள் சோர்வடையாத வகையில்..
தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் நாகலாந்திற்கு அடிக்கடி பிரசாரம் சென்று வருகின்றனர். தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் தனது வழக்கமான ஸ்டைலில் டெம்ஜென் இம்னா ட்விட்டரில் பதிவுகள் போடுவதை நிறுத்தவில்லை. கிடைக்கும் கேப்பில் நெட்டிசன்களையும் சோர்வடையாத வகையில் அவ்வப்போது தனது பாணியில் நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்.

எனது மனைவி கூட இப்படி..
இந்த நிலையில், நாகலாந்திற்கு பிரசாரம் செய்ய வருகை தந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை வரவேற்ற டெம்ஜெம் இம்னா அவரது கையை பிடித்து அழைத்து வந்தார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர் அதற்கு கேப்ஷனாக "எனது மனைவி கூட இப்படி எனது கைகளை பிடித்தது இல்லை. எனக்கு பொறாமையாக இருக்கிறது சார்" என்று பதிவிட்டு இருந்தார். நாகலாந்தில் பிரபலமான பாடகாரான ஆலோபா நாகா என்பவர்தான் இந்த ட்விட்டை போட்டு இருந்தார்.

உங்க கைகளையும் இப்படி பிடித்துக்கொள்கிறேன்
இதற்கு பதிலளித்து இருந்த டெம்ஜெம் இம்னா, "பாஜகவின் அலை நாகலாந்தில் பலமாக உள்ளது. எனவே பாஜகவில் இணைந்து விடுங்கள். கட்சியின் அலை உண்மையான திருமணத்தை விட வலுவாக உள்ளது. பாஜகவில் இணையுங்கள் உங்கள் கைகளையும் இப்படி பிடித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டு ஸ்மைலி கேப்ஷனையும் போட்டுள்ளார். நாகலாந்து அமைச்சர் டெம்ஜெம் இம்னாவின் இந்த பதிவு இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நெட்டிசன்களின் ஜாலி கமெண்ட்
நெட்டிசன்கள் பலரும் டெம்ஜென் இம்னா பிற மாநிலங்களுக்கும் பிரசாரம் செய்ய வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "கர்நாடக தேர்தல் பிரசாரத்திற்கும் வாருங்கள். இங்கு உங்களுக்கு அதிக பாலோயர்கள் இருக்கிறார்கள். கர்நாடகா வந்தால் நானும் உங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்வேன்" என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் ஜாலியாக பதிவிட்டு டெம்ஜென் கருத்துக்களுக்கு கீழே கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications