இந்தியாவின் முதல் முஸ்லீம் உள்துறை அமைச்சர்.. இன்றைய ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீ்ர் மாநில முதல்வராக பதவியேற்றுள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகமது சயீத் உள்துறை அமைச்சர் பதவியை வகித்த முதல் முஸ்லீம் என்ற பெருமையை பெற்றவர்.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகமது சயீத்(74) ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த முப்தி முகமது சயீத் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜிபெஹராவில் ஏழைக் குடும்பத்தில் 1936ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி பிறந்தார்.

ஸ்ரீநகரில் உள்ள எஸ்.பி. கல்லூரியில் படித்த அவர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் அரபு வரலாற்றில் பட்டம் பெற்றார்.
1950ம் ஆண்டு அவர் தேசிய மாநாட்டு கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை துவங்கினார்.
1962ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனது சொந்த ஊரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 1967ம் ஆண்டிலும் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முப்தி தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1971ம் ஆண்டு அவர் மாநில அமைச்சர் ஆனார். ஆனால் அடுத்த இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்தார்.
1972ம் ஆண்டு முப்தி கேபினட் அமைச்சர் ஆனார். 1986ம் ஆண்டு ராஜீவ் காந்தி அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனார்.
1987ம் ஆண்டு அவர் காங்கிரஸில் இருந்து விலகி வி.பி. சிங் தலைமையிலான ஜன மோர்சா கட்சியில் சேர்ந்தார்.
1989ம் ஆண்டு இந்தியாவின் முதல் முஸ்லீம் உள்துறை அமைச்சர் ஆனார்.
1989ம் ஆண்டு முப்தியில் மகள் ருபையா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். 5 தீவிரவாதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகே ருபையா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
1999ம் ஆண்டு முப்தி மீண்டும் காங்கிரஸில் சேர்ந்தார். ஆனால் அதே ஆண்டு அவர் கட்சியை விட்டு விலகி மக்கள் ஜனநாயக கட்சியை துவங்கினார்.
2002ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி முப்தி ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆனார்.
2008ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றது.
1999ம் ஆண்டு அவர் கட்சி அமைக்க அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தவர் அவரின் மகள் மெஹபூபா முப்தி.
முப்திக்கு ருபையா, மெஹபூபா தவிர மெஹ்மூதா என்ற மகளும் உள்ளார். முப்தியின் மகன் தசாதுக் ஹாலிவுட்டில் ஒளிப்பதிவாளராக உள்ளார்.
முப்தியின் தந்தை முப்தி குலாம் முகமது பிஜிபெஹராவில் மத போதகராக இருந்தார். மக்கள் அளிக்கும் காணிக்கை தான் அவரது வருமானமாக இருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications