"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை- காலி செய்ய 'தொகாடியா' கெடு?: குஜராத்தில் பதற்றம்!!

குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் முஸ்லிம்கள் இப்படி சொத்துகள் வாங்குவதை ஹிந்து தீவிரவாத அமைப்புகளான ராம் தர்பார்ஸ், ராம் தூன்ஸ் போன்றவை தடுப்பது அங்கு வழக்கம்.
இந்த நிலையில் தற்போது முஸ்லிம் தொழிலதிபர் வீடு வாங்கியதற்கும் இந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும் தலையிட்டுள்ளது. முஸ்லிம் தொழிலதிபர் வாங்கிய வீட்டை ஆக்கிரமித்து அங்கே பஜ்ரங் தள் பெயர் பலகையை தொங்க விட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தொகாடியா உத்தரவிட்டும் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
மேலும் ஹிந்துக்கள் சொத்துகளை முஸ்லிம்கள் வாங்குவதை தடுக்க பாவ்நகரை கலவரம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஹிந்துக்களின் அசையா சொத்துகளை வேறு சமூகத்தினர் வாங்க முடியாது. அத்துடன் இப்படி சொத்துகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொள்வதன் மூலம்தான் வேறு சமூகத்தினர் சொத்து வாங்குவதை தடுக்க முடியும் என்று தொகாடியா பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த வீட்டில் வசித்து வரும் முஸ்லிம்கள் வீட்டைக் காலி செய்ய 48 மணி நேர கெடுவையும் தொகாடியா விதித்துள்ளாராம்.
"ராஜிவ் காந்தி கொலையாளிகளே தூக்கிலிடப்படாத நிலையில் எந்த ஒரு வழக்கு வந்தாலும் சந்திப்போம்" என்றும் தொகாடியா கேள்வி எழுப்பியதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன..
பாஜகவின் நிலை என்ன?
தொகாடியாவின் இந்த பேச்சுக்கு ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொகாடியாவின் இந்த அடாவடித்தனமான செயல்பாடு குறித்து பாரதிய ஜனதா கட்சி என்ன கருத்து தெரிவிக்கப் போகிறது? அதன் நிலைப்பாடு என்ன? என்று ஐக்கிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications