சொத்துப் பிரச்சினை... முன்னாள் ராணுவ வீரரை அடித்துக் கொன்ற மனைவி, மகள் - உ.பி.யில் பயங்கரம்
அமேதி: சொத்துப் பிரச்சினைக் காரணமாக உத்திரப்பிரதேசத்தில் முன்னாள் ராணுவ வீரரை அவரது மனைவியும், மகளும் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள கொச்சிட் கிராமத்தில் முசாபிர்கானா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜப்பார். இவருக்கு மஹிஜாபன் என்ற மனைவியும், ஷாமா, ஷாகின் என இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.
இதில், மூத்தமகள் ஷாமா கணவர் வீட்டில் இருக்க, இளைய மகள் ஷாகின் மட்டும் தனது கணவருடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபகாலமாக சொத்து முழுவதையும் இளைய மகள் பேரில் எழுதித் தரச் சொல்லி ஜப்பாரை வற்புறுத்தி வந்துள்ளார் அவரது மனைவி மஹிஜாபன். ஆனால் ஜப்பார் அதற்கு உடன்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மஹிஜாபன் தனது மகள் ஷாகினுடன் சேர்ந்து சம்பவ தினத்தன்று ஜப்பாரைக் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜப்பார் சுல்தான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்து விட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தௌ வந்த போலீசார், தாய் மற்றும் மகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications