ஜார்க்கண்ட் முதல்வராக 3-வது முறையாக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றார்- அமலாக்கத்துறை ஆக்ஷன் என்ன?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றார். ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்., ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக 3- வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம்- காங்கிரஸ் இணைந்த "இந்தியா" கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார்.

ஹேமந்த் சோரன் மீது நில மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளைத் தொடர்ந்தது அமலாக்கத்துறை. இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் புதிய முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் கல்பனாவுக்கு ஆதரவு இல்லை என்பதால் சீனியரான சம்பாய் சோரன் புதிய முதல்வரானார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரன் ஜாமீன் மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், அவர் மீதான புகாருக்கு எந்த முகாந்திரமுமே இல்லை என கூறி ஜாமீனில் விடுதலை செய்தது. இதற்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடும் செய்திருக்கிறது.
இந்தப் பின்னணியில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது சம்பாய் சோரன் தரப்பில் லேசான அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாம். ஆனாலும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வராக இருப்பதுதான் சரி என பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த சம்பாய் சோரன் தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஹேமந்த் சோரன் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை ஆளுநர் ராதாகிருஷ்ணனிடம் கொடுத்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனடிப்படையில் இன்று மாலை ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் மாளிகையில் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 3-வது முறை பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.
அதே நேரத்தில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை தொடர்ந்து பதவியில் நீடிக்க விடுமா? என்கிற கேள்வியும் தொடரத்தான் செய்கிறது என்கின்றன அம்மாநில அரசியல் வட்டாரங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications