சாமியாராக மாறினார் மாஜி ஐஏஎஸ் அதிகாரி ஐ.ஆர்.பெருமாள்!
பெங்களூர்: கர்நாடகாவில் பணியாற்றிய தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாஜி ஐஏஎஸ் அதிகாரி பெருமாள், சிவபெருமான் மீதான பக்தியால் சன்னியாசம் பூண்டு சாமியாராக மாறிவிட்டார்.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவிலுள்ள இஞ்சிமேடு கிராமத்தில் பெற்றோருக்கு ஐந்தாவது பிள்ளையாக பிறந்தவர் ஐ.ஆர்.பெருமாள். படிப்பால் உயர்ந்து, 1982ம் ஆண்டு கர்நாடக பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாக பணி நியமனமானார்.

இதன்பிறகு, கர்நாடகாவின் பல மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றினார். இவர் மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த ரெய்ச்சூர் மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழையின்போது மக்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கினர். அப்போது பெங்களூருக்கு பணி நிமித்தமாக வந்திருந்த பெருமாள், உடனடியாக ரெய்ச்சூருக்கு சென்று வெள்ளத்தின் நடுவே மாட்டு வண்டி கட்டிக்கொண்டு மக்களை மீட்டு வந்தார்.
இதன்காரணமாக, அம்மாவட்டத்தைவிட்டு பணியிடமாற்றம் செய்தபோது, மக்களே வீதிக்கு வந்து கலெக்டரை மாற்றக்கூடாது என்று போராட்டங்கள் நடத்தினர். இதன்பிறகு கர்நாடக உணவு வழங்கல் துறை அமைச்சக முதன்மை செயலராக பணியாற்றியபோது, 1991ம் ஆண்டு, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு வெளியானது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர்.
அப்போது பெங்களூர் போலீஸ் கமிஷனராக இருந்த தமிழரான ராமலிங்கத்தை, பெருமாள் அணுகி, தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுக்கொண்டாராம். ஆனால் தனது பேச்சை இந்த நேரத்தில் ஒரு கான்ஸ்டபிள் கூட கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்று கமிஷனர் வருத்தப்பட்டதாக கூறப்படுவதுண்டு. இதைத்தொடர்ந்து, அரிசி ஆலை உரிமையாளர்கள மிரட்டி, வீடு, உடமைகளை இழந்து வீதியில் நின்ற, தமிழர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார் பெருமாள்.
இந்நிலையில், பல்வேறு துறைகளில் முதன்மை செயலாளர்களாக பதவி வகித்த பெருமாள் கடந்தாண்டு ஓய்வு பெற்றார். அதன்பிறகு, பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறந்த எடியூரப்பா மீது மதிப்பு வைத்து, அவர் தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்து பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் படுதோல்வியடைந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்து விலகியே இருந்துவருகிறார்.
பெருமாள் தனது பணிக்காலத்திலேயே, சொந்த ஊரான இஞ்சிமேட்டில் சிவனுக்கு கோயில் எழுப்பி, கோயில் விழாவை விமரிசையாக நடத்திவந்தார். இப்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில் முழுக்க சாமியாராகிவிட முடிவு செய்துவிட்டார். இதற்கு ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவரது மனைவியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. தனது பெயரை சிவயோகி பெருமாள் என்று மாற்றிக்கொண்டுள்ளார். இஞ்சிமேடு சிவன் கோயில் பெருமையை பரப்புவதிலேயே முழு கவனமும் செலுத்த உள்ளதாக பெருமாள் கூறுகிறார். பெருமாளின் மகளும் கடந்தாண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிகாரம், அரசியல் ஆகியவற்றை துறந்து சன்னியாசியாக முடிவெடுத்துள்ள பெருமாளை கர்நாடக மக்கள் பாராட்டுகிறார்கள்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications