"அசிங்கம்".. பாஜக படுமோசம்.. யாரையுமே கேவலமா பேசக்கூடாது, புரியுதா.. வீடியோவே போட்டுட்டாரு முதல்வர்

பாஜகவுக்கு அறிவுரை சொல்லி, ஒடிஷாவின் பிஜூ பட்நாயக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: பாஜகவுக்கு நறுக்கென ஒரு மெசேஜ் சொல்லி உள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.. இந்த வீடியோதான் இணையத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

உத்தரபிரதேசம் கட்டௌலி சட்டசபை இடைத்தேர்தலில் ராஷ்டிரிய லோக்தளம் வேட்பாளர் மதன் பையா வெற்றி பெற்றுள்ளார்.. சட்டீஸ்கரில் பானுபிரதாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்திரி மனோஜ் வெற்றி பெற்றுள்ளார்..

ஒடிசாவில் பதம்பூர் தொகுதியில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பர்சா சிங் வெற்றி பெற்றுள்ளார்.. ராஜஸ்தான் சர்தர்ஷாஹர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அணில் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

குஷி குஷி

குஷி குஷி

பீகாரில் மட்டும், குர்ஹானி தொகுதியில் பாஜகவின் கேசவ பிரசாத் வென்றுள்ளார்... அதாவது 5 மாநில இடைத்தேர்தல்களில் 4 இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.. ஆனால், 4 தோல்வியை பற்றி வாயே திறக்காமல், குஜராத்தில் வெற்றிபெற்றதை மட்டுமே குஷியில் கொண்டாடி கொண்டிருக்கிறது.. 4 மாநில லோக்சபா தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல், இமாச்சல பிரதேச தேர்தல்களில் தோல்வி அடைந்ததை பற்றி எதுவுமே பேசவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், பாஜக ஏன் இங்கெல்லாம் தோற்றது என்பது குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நச்சென்று ஒரு கருத்தை சொல்லி உள்ளார்.

கப்சிப் மோடு

கப்சிப் மோடு

ஒடிசா மாநிலம் பதம்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், பிஜு ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் பர்ஷா சிங்.. பதம்பூர் தொகுதியின் பிஜு ஜனதா தளம் எம்எல்ஏவாகவிருந்த பிஜய் ரஞ்சன் சிங் கடந்த அக்டோபர் 2ம் தேதி இறந்துவிட்டார்.. அதனால்தான் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.. ரஞ்சன் சிங்கின் மகள்தான் இந்த பர்ஷா சிங்.. இவரையே அந்த கட்சி வேட்பாளராக நிறுத்தினார்கள்.. அரசியலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர் பர்ஷா சிங்.. இளம்வயது பெண்ணும்கூட..

மரணமாஸ்

மரணமாஸ்

இவரை பாஜக அளவுக்கு அதிகமாகவே விமர்சித்துவிட்டது.. தன்னுடைய பிரச்சாரங்களில் நிறைய கேலி கிண்டல்களை செய்தது.. எத்தனையோ பிரச்சார கூட்டங்களில் இவரை பாஜகவினர் எள்ளி நகையாடிய நிலையில், அப்போதே அதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தனஅரசியலில் அனுபவமில்லை என்பதற்காக, ஒரு பெண்ணை இப்படியா அவமரியாதை செய்வது? என்று பலதரப்பில் இருந்தும் பாஜகவுக்கு கண்டனங்கள் வந்தன.. ஆனாலும், தங்களுக்கான பாஜக ஆதரவு அலையும், ஆளும்கட்சிக்கான அதிருப்தி ஓட்டுகளும் சேர்ந்து எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பாஜக நம்பிக் கொண்டிருந்தது..

ஷேம் ஷேம்

ஷேம் ஷேம்

இந்த நம்பிக்கையில்தான் மொத்தமாக மண் வந்து விழுந்துவிட்டது.. கிட்டத்தட்ட சுமார் 42 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதீப் புரோஹித்தை, பர்ஷா சிங் தோற்கடித்தார். பாஜகவினருக்கு இது மிகுந்த அதிர்ச்சியை தந்தது.. பர்ஷாவுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களே, பாஜகவுக்கான பெண்களை வாக்குகளை கலைத்துவிட்டது என்ற விமர்சனங்கள் இப்போது எழுந்துள்ளன.. இது தொடர்பாக பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

அட்வைஸ் மேஜர்

அட்வைஸ் மேஜர்

அந்த வீடியோவில், மத்தியில் பாஜகவினர் ஆள்கிறீர்கள்... நாங்கள் இம்மாநிலத்தை ஆள்கிறோம்... வாருங்கள் ஒன்றிணைந்து ஒடிசாவின் வளர்ச்சிக்கு உழைப்போம்.. அதைவிட்டுட்டு, பெண்களை எல்லாம் அவமரியாதை செய்யக்கூடாது. பெற்ற அப்பாவை இழந்து, துயரத்தில் ஆழ்ந்திருந்தவரை, ஒரு பெண் என்பதற்காகவே தனிப்பட்ட வகையில் தாக்கலாமா? அப்படி செய்தால் மக்கள் தங்கள் தீர்ப்பை இப்படித்தான் எழுதுவார்கள்" என்று பாஜகவினருக்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை தந்துள்ளார். இந்த வீடியோதான் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. பாஜக இதற்கும் வாய் திறக்காமல், "சைலண்ட் மோடிலேயே" உள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+