Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாயை பிளக்கும் அம்பானியின் "வந்தாரா".. மொத்தம் 3000 ஏக்கர்.. மாப்பிள்ளைக்கு ரீபாப்பரி.. சபாஷ் ஆனந்த்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: இந்தியாவில் இப்படியொரு கொண்டாட்டம் நடந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு, வழக்கம்போல் அம்பானி வீட்டு ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது.. அதேசமயம், மும்பையில் வந்தாரா எனப்படும் விலங்குகள் காப்பகத்தை துவங்கி வைத்து, நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது அம்பானி குடும்பம். அதென்ன வந்தாரா??
குஜராத்தில் 3,000 ஏக்கரில் "வந்தாரா" என்ற புதிய வனப்பகுதியை அம்பானி குழுமம் உருவாக்கியிருக்கிறது.. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதற்கு பிறகுதான் நாட்டு மக்களின் கவனம் இந்த "வந்தாரா"வில் குவிய துவங்கி உள்ளது.

அம்பானி குடும்பம்: குஜராத்தில் 3,000 ஏக்கர் பரப்பளவில், பிரிந்து கிடக்கும் காட்டுப்பகுதிக்குள் செயல்படுத்தப்பட்டுள்ளதுதான் வந்தாரா என்ற திட்டம்.. விலங்குகளை பராமரிப்பது, அந்த ஜீவராசிகளின் நலனில் அக்கறை கொள்வது என்ற உயிரியில் பாதுகாப்பு முயற்சிகளில் தன்னை இணைத்து கொண்டு செயலாற்றுகிறது அம்பானி குடும்பம்.

Excellent Effort about Vantara the 3000 acre animal shelter launched by anant ambani in jamnagar what are the Specialities

குஜராத்தின் ஜாம்நகரில் இந்த 3,000 ஏக்கர் பரப்பளவில் இந்த விலங்குகள் காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் + ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டம் இதுவாகும்.

காயமடைந்த விலங்குகள்: இந்தியா மட்டுமன்றி, உலகின் எந்த மூலையில், விலங்குகள் காயமடைந்தாலும், பாதுகாப்பின்றி கிடந்தாலும், அவைகளை மீட்டு, சிகிச்சை தந்து, செழிப்பான வாழ்விடமும் அமைத்து தருவதே இந்த வந்தாரா திட்டத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில், 200-க்கும் மேற்பட்ட யானைகளை இந்த வந்தாரா அமைப்பு மீட்டிருக்கிறது..

ஆபத்தான நிலையிலிருந்த பறவைகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட விலங்குகளை மீட்டுள்ளது.. முக்கியமாக காண்டாமிருகங்கள், சிறுத்தைகள், முதலைகள் பலவற்றுக்கு மறுவாழ்வு அளித்த பெருமை இந்த வந்தாராவுக்கு உண்டு. முக்கியமாக, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேட்டையாடுதலிலும், கருணைக்கொலையிலும், பராமரிப்பின்மையிலும் சிக்கிய விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.

விலங்குகள்: ஒவ்வொரு விலங்குகளுக்கும் பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.. யானைகளுக்காகவே சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.. தங்குமிடம், நீர்நிலைகள், நீர் சிகிச்சை குளங்கள் என அதற்குள்ளும் நிறைய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.. யானைகளுக்கான மூட்டு வலி சிகிச்சைகளுக்காகவே, ஜக்குசிகளும் (jacuzzi) ஸ்பெஷலாக அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

வந்தாரா மையத்தில் 14,000 சதுர அடிக்கு மேல் ஒரு சிறப்பு கிச்சன் இருக்கிறதாம். இங்கு ஒவ்வொரு யானைக்கும் சிறப்பு உணவு தயாரிக்கப்படுகிறதாம். மற்ற விலங்குகளுக்காகவும். 650 ஏக்கரில் விலங்குகள் நல்வாழ்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளன.. இங்கு சர்க்கஸ் அல்லது உயிரியல் பூங்காக்களில் இடப்பற்றாக்குறையால் அவதியுறும் விலங்குகள் மீட்கப்பட்ட இங்கு பாதுகாக்கப்பட்டும் வருகின்றன..

பண்ணைகள்: இதற்காகவே, இந்த வந்தாராவில்., 2,100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுள்ளார்கள்.. காயமடைந்த 200 சிறுத்தைகளையும், பண்ணைகளில் இடமின்றி தவித்த ஆயிரக்கணக்கான முதலைகளையும் இவர்கள் மீட்டிருக்கிறார்களாம். நம்முடைய தமிழ்நாட்டின் கடும் நெரிசல் மிகுந்த இடங்களில் இருந்தும், 1,000-க்கும் மேற்பட்ட முதலைகள் மீட்கப்பட்டுள்ளன.மொத்தமுள்ள 43 விலங்கினங்களில், 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் இங்கு பராமரிப்பில் உள்ளன.

இந்த வந்தாராவில் 1 லட்சம் சதுர அடி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையமும் செயல்பட்டு வருகிறது.. இங்கிருக்கும் ஆராய்ச்சி மையத்தில், ஐசியூ, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், எண்டோஸ்கோபி, உள்ளிட்ட தொழில்நுட்பமும் செயல்படுத்தப்பட்டுள்ளது..

கனவுத்திட்டம்: இது குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இயக்குநர் ஆனந்த் அம்பானி சொல்லும்போது, "இது என்னுடைய கனவுத் திட்டம். இது என்னுடைய ஆசை.. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, இந்த வனவிலங்கு மீட்பு மையத்தைத் தொடங்கினோம். 2008-ம் ஆண்டு முதலே யானைகளை மீட்டு வருகிறோம். மருத்துவமனையில் உள்ள விலங்குகளுக்குச் செயற்கை கருவிகள் (prosthetics) வைக்கிறோம். கூடிய விரைவில் உயிரியல் பூங்கா பொதுமக்களுக்காகத் திறக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த் அம்பானியின் இந்த பேச்சுக்களுக்கு பல ஆதரவுகளும், அதேசமயம் எதிர்ப்புகளும் என மாறி மாறி இணையதளத்தில் கருத்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.. ஆனாலும், எவ்வளவுதான கோடிகளில் புரண்டாலும், உதவி செய்வதற்கு ஒரு மனசு வேணும்..

பாராட்டுக்கள்: அந்தவகையில், காயமடைந்த, ஆதரவற்ற விலங்குகளை மீட்டு கொண்டு வந்து, பராமரித்து, சிகிச்சையையும் வழங்கி வரும் "வந்தாரா" திட்டத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், 2035ம் ஆண்டுக்குள் "நிகர கார்பன் ஜீரோ" நிறுவனமாக மாறும் என்ற நம்பிக்கையுடன் நடைபோட்டு வரும் ரிலையன்ஸின் அம்பானி பயணத்திற்கு "பசுமையான" வாழ்த்துக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன... சபாஷ்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+