"பச்சையாக" பாசத்தை காட்டிய மனைவி.. அப்படியே உறைந்து நின்ற கணவர்.. மாறிப்போன தலையெழுத்து.. சிலிர்ப்பு
பெங்களூரு: இளம்ஜோடியின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோ வெளியான கொஞ்ச நேரத்திலேயே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இதை லைக் செய்துள்ளனர்.. என்ன காரணம்?
பொதுவாக, காதலின் உச்சம் என்பதே, ஒருவரை தன் உச்சக்கட்ட அன்பினால் வீழ்த்துவதும், வெற்றிபெறுவதும்தானே.. தாங்கள் காதலிக்கும்போது, தங்களின் மனம்கவர்ந்தவர்களை ஈர்ப்பதற்காக, சாதாரண விஷயங்களையும் கடந்து, அசாதாரண செய்கைகளில் ஈடுபட்டுவிடுவார்கள்..

புரிதல் குறைபாடுகள்: எத்தனையோ புரிதல் குறைபாடுகளினால், விவாகரத்தை பெற்று வரும்நிலையில், சில தம்பதிகள் தங்கள் துணை மீதான காதலை ஆச்சரியத்தில் விரியவைத்துவிடுகிறார்கள்.. சம்பந்தப்பட்ட துணையுடன் சேர்த்து, மற்றவர்களையும் தங்கள் அளப்பரிய செய்கையால் திக்குமுக்காட செய்துவிடுகிறார்கள்.. அப்படித்தான் இந்த சம்பவமும் நமக்கு உணர்த்துகிறது.
பெங்களூரில் வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. தன்னுடைய கணவர் மீது மிகுந்த பாசத்தை வைத்திருப்பவர்.. கணவர் பெயர் சதீஷ்.. தன்னுடைய கணவரின் பெயரை பச்சை குத்தியிருக்கிறார்.. இதன்மூலம் தன்னுடைய மனம் உளமாற மகிழ்ச்சி அடைவதாகவும் பூரித்து சொல்கிறார் அந்த பெண்.. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது..
டாட்டூ கலைஞர்: பெங்களூர் ஜே.பி.நகரை சேர்ந்த கிங் மேக்கர் டாட்டூ ஸ்டுடியோ நிறுவனம், இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளது.. "உண்மையான காதல்" என்று இந்த வீடியோவுக்கு ஒரு லைட்டிலையும் தந்துள்ளது.. இந்த வீடியோ பதிவிட்ட கொஞ்ச நேரத்திலேயே 2 லட்சம் பேர் அதை லைக் செய்துவிட்டனர்.
தன்னுடைய கணவரை கவர்வதற்காக, நிறைய யோசனைகளை செய்தாராம் இந்த பெண்.. கடைசியில், இப்படி ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார்... தன்னுடைய நெற்றியில் சதீஷ் என்று பெயரை பச்சை குத்திக் கொண்டுள்ளார்.. வீடியோவில், அந்த பெண் ஒரு சேரில் உட்கார்ந்து, நெற்றியில் கணவர் சதீஷ் என்ற பெயரை பச்சை குத்துகிறார்.. முன்னதாக, அந்த டாட்டூ கலைஞர், பெண்ணின் நெற்றியில் பெயரை ஒட்டுவதற்கு முன்பு, ஒரு காகிதத்தில் சதீஷ் என்று எழுதுகிறார்...
கார்பன் பேப்பர்: அதற்கு பிறகு கார்பன் பேப்பரை பயன்படுத்தி அதில் பெயர் அச்சிடப்பட்டது... இதெல்லாம் பார்த்து அந்த இளம்மனைவி பூரிப்பில் மிதந்து கொண்டேஇருந்தார்.. பிறகு, டாட்டூ கலைஞர், நெற்றியில் ஊசியால் மை பூச துவங்கியதுமே, லேசாக வலி தெரிகிறது.. இதனால், டாட்டூ கலைஞரின் கைகளை அந்த பெண் தடுப்பதும், பிறகு கையை இறுக்க பிடிப்பதுமாக இருக்கிறார்.. இறுதியில் சதீஷ் என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுவிட்டதுமே, மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் அந்த பெண்..

ஓவர் ஓவர்: இந்த வீடியோவை பார்த்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. ஆனாலும் சிலர் இதற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
"இதெல்லாம் ரொம்ப ஓவர்.. தங்கள் துணையை எப்படி புரிந்து வைத்து கொண்டீர்கள் என்பதை வெளிப்படுத்த, டாட்டூ குத்தி காட்டுவது முறையில்லை.. நெற்றியில் பச்சை குத்துவது வேடிக்கையானது.. இப்படி பச்சை குத்தி தான் உண்மையான அன்பை நிரூபிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. அதுவும் இல்லாமல், இது ஒன்றும் ஆச்சரியம் கிடையாது.. அந்த காலத்தில் நம் தாத்தா, பாட்டிகள் இப்படித்தான் பெயர்களை பச்சைக்குத்தி கொண்டிருந்தார்கள்.. ஒருவருக்கொருவர் புரிதலுடன் கூடிய நெடிய வாழ்வை வாழ்ந்தாலே போதும் என்று பதிவிட்டு வருகிறார்கள்..!!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications