மோடி பதவியேற்பு விழாவைச் சிறப்பிக்க மனைவி, மச்சானுடன் விஜயகாந்த் டெல்லி பயணம்!
டெல்லி: மோடி பதவியேற்பு விழாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மட்டுமே புறக்கணித்துள்ளார். மற்றபடி தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகள், ஆதாயங்களை மனதில் வைத்துக் கொண்டு டெல்லிக்குப் பறந்துள்ளனர்.
சிங்கள இனவெறிக் காடையன் ராஜபக்சேவை மோடி பதவியேற்புக்கு அழைத்ததைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விழாவுக்கும் அவர் போகவில்லை. போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.
அதேசமயம் தமிழகத்தைச் சேர்ந்த மற்ற பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் சப்ஜாடாக நிகழ்ச்சிக்குப் போகிறார்கள்.

மனைவி, மச்சானுடன் விஜயகாந்த் பயணம்
தேமுதிக சார்பில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.

2 நாட்களுக்கு முன்பே டேரா போட்ட அன்புமணி
பாமக சார்பில் அன்புமணி அன் கோ பாமக சார்பில், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இதில் மணி நேற்று போனார். அன்புமணியோ 2 நாட்களுக்கு முன்பே போய் உட்கார்ந்து விட்டார்.

கொங்குநாடு ஈஸ்வரன்
இதேபோல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் ஆகியோரும் இன்று டெல்லி சென்றனர்.

வைகோவுக்கு மட்டும் உணர்வு
வைகோ மட்டும் தனக்கு இருக்கும் இன உணர்வை விட்டு விடாமல் போராட்டத்தை நடத்துகிறார். மற்றவர்களெல்லாம் மோடியைக் கண்டு, அவர் கொடுக்கும் விருந்தை உண்டு, வெழாவைச் சிறப்பிக்கவுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications