புகை மூட்டம், அதிர தொடங்கிய பெட்டிகள்.. ஆன் ஆஃப் மோடில் இருந்த மின்சாரம்.. நேரில் பார்த்தவர் பகீர்
புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவர் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 900 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து இந்த விபத்தில் உயிர் பிழைத்த ராஜலட்சுமி என்பவர் ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் வி8 பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போதுதான் மிகவும் அதிர தொடங்கியது. மின்சாரம் விட்டு விட்டு எரிந்தது. இதனால் எங்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. சின்ன சின்ன பொருள்கள் எல்லாம் உடைந்து விழுந்தது.
அப்போது ரயில் கட்டுப்பாடு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர ஆரம்பித்தோம். எங்களுடைய கோச் லேசாக டிராக்கை விட்டு சாய்ந்துவிட்டது. அதனால் எங்கள் பெட்டியில் பயணம் செய்தவர்களுக்கு அதிகளவில் காயங்கள் ஏதும் இல்லை. ஜெனரல் கம்பார்ட்மென்ட், ஸ்லீப்பர் கிளாஸில் இருந்தவர்கள் அதிக காயமடைந்தனர்.
முதலில் புகை வந்தது. இதனால் ரயிலில் தீவிபத்து என நினைத்தோம். ஆனால் விபத்து நடந்த கால் மணி நேரம் கழித்துதான் இது தீவிபத்து அல்ல. ரயில் தடம் புரண்டுவிட்டது என்பதே எங்களுக்கு தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கும் பெட்டிக்கு அழைத்துச் சென்றோம். 260 பேர் (இந்த பேட்டி எடுத்த போது 260 பேர் பலி) இறந்துவிட்டார்கள் என சொல்கிறார்கள்.
ஆனால் உயிரிழப்பு அதிகமாகவே இருக்கும். ஒரு ரயிலில் 20 பெட்டிகள் என வைத்துக் கொண்டாலும் ஒரு பெட்டியில் 70 பயணிகள் இருந்தார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் பெரும்பாலான ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கோரமான நிலையில் உள்ளன. அதனால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்றே தெரிகிறது என்றார்.
இந்த விபத்துக் குறித்து ராஜலட்சுமியின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகள் எங்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க இந்த கோரமண்டல் ரயிலில் வந்தார். மாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்த போதுதான் எனக்கு அவர் தமிழகத்திற்கு அந்த ரயிலில்தான் வந்தார் என்பது தெரியும். நாங்கள் போன் செய்து கேட்ட போதுகூட அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்தவாறே கொல்கத்தாவில்தான் அறையில் இருக்கிறேன் என்றார். நாங்கள் பயப்படக் கூடாது என்பதற்காக அவர் அப்படி சொல்லியுள்ளார்.
எங்கள் மகளை பார்த்ததும் நாங்கள் கட்டி பிடித்துக் கொண்டு அழுதோம். சமூக பணி படிப்பின் கேம்பிற்காக கொல்கத்தா சென்றார். கேம்ப் முடிந்ததால் எங்களிடம் சொல்லாமலேயே அதிர்ச்சி கொடுக்க வந்துள்ளார். எங்கள் மகளை நல்லபடியாக கொண்டு வந்து சேர்த்த கடவுளுக்கு நன்றி என பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications