Exclusive: 370-வது பிரிவு ரத்து, பழிவாங்கும் பாஜக- காஷ்மீர் மாஜி முதல்வர் பரூக் அப்துல்லா ஓபன் டாக்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநரின் ஆட்சி அதிகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களாட்சி மலர வேண்டும்; ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிரியான பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது; ஜம்மு காஷ்மீர்- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலம் என்பதாலேயே மத்திய பாஜக அரசு பழிவாங்கிவிட்டது என சரமாரியாக கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா.
நமது ஒன் இந்தியாவுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்: பாஜக, ஆர்.எஸ்.எஸ். தோல்வியைத் தழுவ வேண்டும். மக்கள் நிம்மதி பெருமூச்சு விட வேண்டும். துணை நிலை ஆளுநரின் ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வர வேண்டும். ஜம்மு காஷ்மீரில் மக்களாட்சிதான் அமைய வேண்டும். மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் ஜம்மு காஷ்மீர் மக்களிடையே உள்ளது.

அந்த ஆகஸ்ட் 5 : 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கிய சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அரசியல் சாசனத்தின் அந்த 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மக்களாகிய எங்களிடம் இருந்து அனைத்தையும் பாஜக பறித்துவிட்டது. எங்களுக்கு மிக ஆழமான வேதனையை தந்துவிட்டது பாஜக. எங்கள் மாநிலத்தையே ஒரு யூனியன் பிரதேசமாக குறுக்கிப் போட்டுவிட்டனர். ஜம்மு காஷ்மீர் மக்களைப் பழிவாங்கவே சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பாஜக நிற்கவில்லை.
அப்துல் ரஷீத்: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் இப்போது பேசு பொருளாகி இருக்கும் அப்துல் ரஷீத் ஒரு பொறியாளரே அல்ல. அவரிடம்தான் அவர் பொறியாளர் பட்டம் வாங்கினாரா? இல்லையா? என பட்டத்தை காட்டச் சொல்ல வேண்டும். (பிரிவினைவாதியான அப்துல் ரஷீத், தற்போது ஜாமீனில் பிரசாரம் செய்து வருகிறார். லோக்சபா தேர்தலில் ஒமர் அப்துல்லாவை எதிர்த்து போட்டியிட்டு சுயேட்சையாக வென்று எம்பியானவர்)
நான் ஏன் தூக்கி எறியப்பட்டேன்: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக பதவியில் இருந்த போதே நான் தூக்கி எறியப்பட்டேனே.. நான் என்ன பாகிஸ்தானியா? காலிஸ்தானியா? அமெரிக்காவின் உளவாளியா? எங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இடைவெளி இருக்கிறது.
ஐநாவில் காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது எப்போதும் ஓயப் போவது இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் இருக்கிறது. (ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பான வாக்கெடுப்பு நடத்த கோரும் ஐநா தீர்மானத்தை சுட்டிக்காட்டும் பரூக் அப்துல்லா)
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கிடையேயான உறவை சீர் செய்து கொள்ள வேண்டும். இல்லை எனில் 10 ஆண்டுகளில் மோசமான நிலைமை உருவாகிவிடும்.
அரசியலில் இருந்து ஓய்வா?: என்னுடைய தந்தையார் ஷேக் அப்துல்லா என்னிடம் சொன்னது ஒன்றுதான்.. அரசியலில் நுழைந்துவிட்டால் எப்போதும் அரசியலைவிட்டு விலகிவிடாதே என்பதுதான். ஆகையால் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமே இல்லை. என்னுடைய மகன் அரசியலுக்கே வரக் கூடாது என்றுதான் விரும்பினேன். ஆனால் என் மகன் ஒமர் அப்துல்லாவும் அரசியலில் இருக்கிறார்.
மக்களின் எதிரி பாஜக: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எங்களது தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மக்களின் எதிரியான பாஜக இந்த காஷ்மீர் மண்ணில் ஒருபோதும் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதும் பிரார்த்தனை.
முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம்: இந்த நாட்டின் அடிப்படையையே பாஜக மாற்ரிக் கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ஏன் பிற மாநில மக்களை குடியேற்ற வேண்டும் என மத்திய பாஜக அரசாங்கம் விரும்புகிறது? ஏனெனில் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம் என்பது இருக்கக் கூடாது; அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் மத்திய பாஜக அரசின் சதித் திட்டம். பாஜக ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படி எல்லாம் எதுவும் நடந்துவிடப் போவதும் இல்லை. இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications