For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீ்ங்க யாரா இருந்தாலும் பரவாயில்லை. 'பேஸ்புக்' உங்களுக்காகவே ஒரு 'கேட்டகிரி' வச்சுருக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக் வரலாற்றிலேயே முதல் முறையாக 50க்கும் மேற்பட்ட பாலின வகையை உருவாக்கி தனது ஆப்ஷன்களில் போட்டு வைத்துள்ளது பேஸ்புக்.

இதுவரை ஆண், பெண், இருபாலினர் என்றுதான் அறிந்து வந்தோம், படித்து வந்தோம். ஆனால் அதெல்லாம் ஓல்டு.. இப்போதெல்லாம் இதையும் தாண்டி, ஓரினச் சேர்க்கையாளர், பை செக்ஸுவல், இன்டர்செக்ஸ் உள்ளிட்டவற்றையும் பகிரங்கமாக பலர் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

பார்த்தது பேஸ்புக்.. எதுக்குடா வம்பு.. எல்லா தரப்பு கஸ்டமர்களையும் இழுத்து விட முடிவு செய்து 56 வகையான பாலின வகுப்புகளை வரிசைப்படுத்தி தனது ஆப்ஷன்களில் போட்டுள்ளது.

விதம் விதமான பெயர்களில் இந்தப் பாலின வகுப்புகளை வரிசைப்படுத்தியுள்ளது பேஸ்புக்.. வாங்க பார்க்கலாம்...

சுவரில் இனி தெளிவு

சுவரில் இனி தெளிவு

இதுவரை அவன், அவள் அல்லது அவர்கள் என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் இந்த 56 வகை பாலின பிரிவுகளின் பெயரில் வார்த்தைகள் பயன்படுத்தப்படுமாம்.

அமெரிக்க இங்கிலீஷ் செட்டிங்ஸ்களில் முதலில்

அமெரிக்க இங்கிலீஷ் செட்டிங்ஸ்களில் முதலில்

அமெரிக்க ஆங்கிலத்தை மொழி செட்டிங்ஸில் தேர்வு செய்து வைத்திருப்போருக்கு இந்த பாலின வகுப்புகளைப் பார்த்துப் பயன்படுத்த முடியும்.

விருப்பப்படி கூப்பிட்டுக்கலாம்

விருப்பப்படி கூப்பிட்டுக்கலாம்

ஆண், பெண், திருநங்கையர் என்பதைத் தவிர வேறு மாதிரியான இனப் பிரிவுகளில் தங்களை அறிய விரும்புவோர் அதே பெயரிலேயே அறிய இது ஒரு வாய்ப்பாகும்.

எது எதுவோ அது அதுவே

எது எதுவோ அது அதுவே

அதாவது நீங்கள் உங்களை பை செக்ஸுவல் என்று காட்டிக் கொள்ள விரும்பினால் இனிமேல் அப்படியே சொல்லிக் கொள்ளலாம். ஏஜென்டர் என்று நீங்கள் இருந்தால் அதை அப்படியே சொல்லலாம்.

சவுகரியமாக உணருங்க

சவுகரியமாக உணருங்க

பேஸ்புக்கைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களை சவுகரியமாக உணர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். எனவேதான் மிகவும் கவனத்துடன் இந்தப் பிரிவுகளைத் தொகுத்து இணைத்திருக்கிறோம் என்று பேஸ்புக் கூறுகிறது.

ரோஸ் வெங்கடேசனுக்கு மகிழ்ச்சி

ரோஸ் வெங்கடேசனுக்கு மகிழ்ச்சி

இந்தியாவின் முதலாவது அரவாணி டிவி தொகுப்பாளரான ரோஸ் வெங்கடேசன், பேஸ்புக்கின் இந்த புதிய மாற்றத்தை வரவேற்றுள்ளார். ஆண், பெண் என்பதைத் தவிர்த்து பல பாலின வகுப்புகளை பேஸ்புக் இணைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.

ஏஜென்டர்... பைஜென்டர்

ஏஜென்டர்... பைஜென்டர்

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்களைப் பாருங்கள்.. அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக அவை அனைத்தும் அப்படியே ஆங்கிலத்தில்...
Agender, Androgyne, Androgynous, Bigender, Cis, Cis Female, Cis Male, Cis Man, Cis Woman, Cisgender, Cisgender Female, Cisgender Male, Cisgender Man, Cisgender Woman, Female to Male.

ஜென்டர் ப்ளூயிடு

ஜென்டர் ப்ளூயிடு

FTM, Gender Fluid, Gender Nonconforming, Gender Questioning, Gender Variant, Genderqueer, Intersex, Male to Female, MTF, Neither, Neutrois, Non-binary, Other, Pangender, Trans, Trans Female, Trans Male, Trans Man, Trans Person, Trans Woman, Trans*, Trans* Female, Trans* Male, Trans* Man, Trans* Person, Trans* Woman, Transgender Female, Transgender Person, Transgender Woman, Transmasculine, Transsexual, Transsexual Female, Transsexual Male, Transsexual Man, Transsexual Person, Transsexual Woman, Two-spirit

English summary
For the first time, Facebook is letting its users identify themselves as a gender other than male and female. The social media giant has added a customisable option with about 50 different terms people can use to identify their gender as well as three preferred pronoun choices: him, her or them. A message on Facebook might now invite a user's friend to write a birthday message on "their" wall, instead of "his" or "her" wall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X