தப்பைச் சுட்டிக் காட்டியதற்காக இன்டர்ன்ஷிப்பை "அன்லைக்" செய்து முகத்தைத் திருப்பிக் கொண்ட பேஸ்புக்!
டெல்லி: பேஸ்புக் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் கிடைத்தும் கூட அதை வாய்க்கு எட்டாத நிலையை சந்தித்துள்ளார் ஒரு மாணவர். அவர் செய்த ஒரு "தவறு"தான் இந்த நிலைக்குக் காரணம்.. அவர் செய்த அந்தத் தவறு.. பேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக் காட்டியதுதான்.
பேஸ்புக்கே கதியாகக் கிடக்கும் நபர்களைக் கொண்டது தற்போதைய உலகம். வீட்டில் உள்ளவர்களுடன் பேசக் கூட மாட்டார்கள். ஆனால் பேஸ்புக்கில் வந்து கதை விட்டு கலாய்த்து, கலகலப்பாக திரிவோர்தான் நிறைய.
இப்படிப்பட்ட நிலையில் நான் பேஸ்புக்கி்ல் வேலை பார்க்கிறேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய விஷயம். அப்படித்தான் இந்த மாணவரும் தனக்குக் கிடைத்த இன்டர்ன்ஷிப் வாய்ப்பு குறித்து பெருமை அடைந்திருந்தார். ஆனால் பேஸ்புக் தனது முகத்தை திருப்பிக் கொண்டு விட்டது. இவரை அன்லைக் செய்து விட்டது.

அரன் கன்னா
அவரது பெயர் அரன் கன்னா. ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் இவர். இவருக்கு பேஸ்புக்கில் இன்டர்ன்ஷிப் கிடைத்தது. இதனால் பெருமையாக இருந்தார் அரன் கன்னா.

விதி வந்து விளையாடியது
3 மாதங்களுக்கு முன்பே இவர் பேஸ்புக்கி்ல் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக இவர் செய்த ஒரு காரியம்தான் இவருக்கு ஆப்பு வைத்து விட்டது.

மரூடர்ஸ் மேப்
அதாவது மரூடர்ஸ் மேப் ‘Marauder's Map' என்ற அப்ளிகேஷனை இவர் உருவாக்கினார். இதை பயன்படுத்தி பேஸ்புக் மெசஞ்சரில் இணையும்போது, நமக்கு மெசேஜ் அனுப்புவோர் எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதை அறிய முடியும்.

கருத்துப் போன பேஸ்புக்
இது பெரும் பாதுகாப்பு குளறுபடியாகும். உண்மையில் இதைக் கண்டுபிடித்தார் அரன் கன்னா. ஆனால் இது பேஸ்புக்குக்குப் பிடிக்கவில்லை. இந்தக் கண்டுபிடிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவும் செய்தார். இதையடுத்து பலரும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்தனர்.

3 நாளில் இன்டர்ன்ஷிப் காலி
இதையடுத்து அடுத்த 3 வது நாளில் அரன் கன்னாவுக்கு வழங்கப்பட்ட இன்டர்ன்ஷிப்பை ரத்து செய்து விட்டது பேஸ்புக் நிறுவனம். மேலும் பேஸ்புக்கில் இருந்த லொகேஷன் எக்ஸ்டென்ஷனையும் பேஸ்புக் நீக்கி விட்டது.

அரன் விதியை மீறி விட்டாராம்
இன்டர்ன்ஷிப்பை ரத்து செய்தது குறித்து பேஸ்புக் நிறுவனம் அளித்த விளக்கத்தில், அரன் கன்னா பிரைவஸி பாலிசியை மீறி விட்டார். பேஸ்புக் டூலை இவர் தவறாகப் பயன்படுத்தி விட்டார் என்பது.

அட அப்ரண்டிஸ்களா
ஆனால் உண்மையில் பேஸ்புக் நிறுவனத்தின் மிகப் பெரிய தவறு ஒன்றை சுட்டிக் காட்டியுள்ளார் அரன் கன்னா என்பதே உண்மை. அதை சரி செய்யாமல், அதைச் சுட்டிக் காட்டிய அரன் கன்னாவைப் பாராட்டாமல், அவருக்கான இன்டர்ன்ஷிப்பை பேஸ்புக் ரத்து செய்ததை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

வேலைக்குச் சேர்த்து பலன் அடைந்திருக்கலாம்
இந்த இளம் வயதில் அருமையான முறையில் பேஸ்புக்கின் தவறைக் கண்டுபிடித்த அரன் கன்னாவைப் பணியில் அமர்த்தி அவர் மூலம் பல பலன்களை அடைந்திருக்கும் வாய்ப்பை பேஸ்புக்தான் இழந்து விட்டதாகவும் பலர் கூறி வருகிறார்கள்.. பேஸ்புக்கில்!
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications