பேஸ்புக்கைக் கலக்கும் 'சீனி மாமா'...!
டெல்லி: பேஸ்புக் குசும்பர்களுக்கு தடுக்கி விழுந்தால் லட்டு கிடைக்கும் அளவுக்கு நாட்டு நடப்பு ரொம்பவே பரபரப்பாக உள்ளது. இதனால் கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் அவர்கள் விடுவதே இல்லை.
இப்படித்தான் சில காலத்திற்கு முன்பு வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை படு சூடாக, சுவையாக கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். அவருக்காக தனி பக்கமே தொடங்கப்பட்டு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த வரிசையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சீனிவாசனுக்காகவும் ஒரு பிரத்யேக பக்கத்தைத் திறந்து செமையாக கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெயரே களேபரம்...
பக்கத்தின் பெயரே களேபரமாக உள்ளது. அதாவது ஸ்ரீனி மாமா, பிசினஸ்மேன் என்று வைத்துள்ளனர்.

கேம் ஆப் டான்ஸ்...
பக்கத்தின் முகப்புப் படமாக கேம் ஆப் டான்ஸ் என்று வைத்துள்ளனர். அதில் சீனிவாசனை வித்தியாசமான கெட்டப்பில் காட்சி தர வைத்துள்ளனர்.

சிரிச்சு... சிரிச்சு
ஸ்டேட்டஸ் படங்கள், செய்திகள் எல்லாமே சிரிக்க வைக்க வைக்கின்றன. சீனிவாசனே பேசுவது போல இந்த ஸ்டேட்டஸ்கள் இருப்பதுதான் விசேஷமானது.

கண்ணுல தண்ணி வச்சிண்டார்...
அதில் லேட்டஸ்ட் பதிவு இதுதான்.. ரமீஸ் ராஜா கண்ணுல தண்ணி வச்சிண்டார். Thank You Pakistan for making Ramiz to shut the eff up. Indha naal iniya naal for all cricket lovers என்று போடப்பட்டுள்ளது.

லலித் மோடியைக் கிண்டல்...
இன்னொரு ஸ்டேட்டஸில் சிவாஜி படத்தில் ரஜினியும், வில்லன் சுமனும் பேசிக் கொள்ளும் படத்தில் லலித் மோடியைக் கிண்டல் செய்வது போல காமெடி செய்துள்ளனர். அதற்கு சீனிவாசன் தரும் கமெண்ட் இது.. Enna Lalit Modi ipdi ayidichu?

டேய் பசங்களா...
தேவர்மகன் படத்தில் சிவாஜி, கமலிடம் பேசுவது போன்ற டயலாக்கை மாற்றி காமெடி செய்துள்ளனர் ஒரு பதிவில். அதற்கு சீனிவாசன் அடிக்கும் கமெண்ட்... டேய் பசங்களா...#LetsFootball, for a change என்பதாகும்.

ஒளற்ரான்...
அடுத்த பதிவில் ரவீந்திர ஜடேஜாவை கிண்டலடித்துள்ளார் "ஸ்ரீனி மாமா". அதாவது ஜடேஜா ஒளற்ரான்.. என்று நக்கலடித்துள்ளார். ஏண்டா டேய் என்றும் பன்ச் வைத்துள்ளார் சீனி.

பக்கத்திற்குப் பக்கம்...
இப்படிப் பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு மூட்டி வைத்து சீனிவாசனை கலாய்த்து வருகின்றனர் இந்த குசும்பர்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications