கணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம்.. போலி ஜோதிடரின் பரபர லீலைகள்
பெங்களூர்: பெங்களூரில் இளம் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்ததோடு அவரது நகைகள், பணத்தையும் அபேஸ் செய்த போலி ஜோதிடரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர், விஜயநகர் பகுதியிலுள்ள ஆர்.பி.சி லேஅவுட்டை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆதரவற்றோர் அமைப்பு நடத்துவதாக கூறிக்கொண்டு டொனேஷன் வாங்க இவரது வீட்டுக்கு வந்தவர்தான் பிரசன்ன குமார் (31).
இரக்கப்பட்ட ஐஸ்வர்யா, ரூ.200 நன்கொடை கொடுத்துள்ளார். மேலும் தனது போன் நம்பரை ரசீதில் எழுதியுள்ளார். இந்த நிலையில் திடீரென, உங்கள் மகனுக்கு உள்ள பிரச்சினையை நான் தீர்த்து வைக்கிறேன் என பிரசன்னகுமார் கூறியுள்ளார்.

வலிப்பு நோயை குணப்படுத்த பூஜை
ஐஸ்வர்யாவின் மகனுக்கு வலிப்பு நோய் பிரச்சினை இருந்துள்ளது. இதை குறிப்பிட்டு கூறிய பிரசன்னகுமார், தான் அதை குணப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். ஐஸ்வர்யாவுக்கு ஆச்சரியமாகிவிட்டது. இவர் எப்படி சரியாக தனது மகனின் பிரச்சினை கூறினார் என்ற வியப்பு காரணமாக, ஜோதிடர் மீது நம்பிக்கை பிறந்துள்ளது.

கணவர் இல்லதா நேரம்
இதையடுத்து அவ்வப்போது வீட்டுக்கு வந்து பூஜைகள் செய்வதாக கூறி ஏதோ செய்துள்ளார். அதிலும், ஐஸ்வர்யாவின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்தான் பிரசன்னகுமார் வருவது வழக்கமாம்.

போதை சிகரெட்
ஒருநாள் வந்திருந்தபோது, போதை பொருள் கலந்த சிகரெட்டை திடீரென, ஐஸ்வர்யா வாயில் வைத்து, கட்டாயமாக உறியச் சொல்லியுள்ளார். இதை உறிந்ததும், ஐஸ்வர்யாவுக்கு போதை தலைக்கு ஏறியது. இதனால் பாதி மயக்கமான நிலைக்கு சென்றார் ஐஸ்வர்யா.

வைத்தியமாம்
இந்த நிலையை பயன்படுத்திய பிரசன்னகுமார், ஐஸ்வர்யாவுடன் உடலுறவு கொண்டுள்ளார். போதை தெளிந்ததும், தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி ஐஸ்வர்யா வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் பிரசன்னகுமாரோ இது ஒரு வைத்தியம் என கூறியுள்ளார்.

7 முறை உடலுறவு
தன்னுடன் 7 முறை உடலுறவு வைத்துக்கொண்டால், உனது மகன் உடல்நிலை நன்றாக ஆகிவிடும். என்னிடம் உள்ள சக்தி மூலம், உனது மகனை குணமாக்க இது ஒரு வழி என கூறியுள்ளார். இதற்கு ஐஸ்வர்யா ஒப்புக்கொள்ளாத நிலையில், ஏற்கனவே உறவு வைத்தபோது எடுத்த நிர்வாண போட்டோக்களை காட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் கணவன் இல்லாத நேரத்தில் ஐஸ்வர்யாவுடன் உடலுறவு வைப்பதை வாடிக்கையாக்கியுள்ளார் பிரசன்னகுமார்.

பணம் பறிப்பு
போட்டோவை வெளியே காட்டிவிடுவார் என்ற பயத்தால், உடலுறவுக்கு ஐஸ்வர்யா ஒத்துழைக்க தொடங்கியதும், பிரசன்னகுமாருக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது. போட்டோவை காண்பித்து மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார். ஐஸ்வர்யா தனது நெக்லஸ், மோதிரம் என பல நகைகளை பிரசன்னகுமாருக்கு கொடுத்துள்ளார்.

போலீசில் சிக்கினார்
தொந்தரவு அதிகரித்ததால், கணவரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பிரசன்னகுமாருக்கு வாங்கி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா. பணம் குறைவதால் சந்தேகமடைந்த ஐஸ்வர்யாவின் கணவர், மனைவியிடம் கேள்விகளை அடுக்கியதால், விவரம் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யாவின் கணவர், மனைவியை நைய புடைத்துள்ளார். இதுகுறித்து விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைதொடர்ந்து பிரசன்னகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications