இந்தியாவில் 277 போலி இன்ஜினீயரிங் காலேஜ்கள்.. தமிழகத்தில் மட்டும் 11.. ஷாக் பட்டியல்!
இந்தியாவில் மொத்தம் 277 போலி பொறியியல் கல்லூரிகள் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: இந்தியாவில் 277 போலி பொறியியல் கல்லூரிகள் மற்றும் 24 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் சத்யா பால் சிங் தெரிவித்துள்ளார். இதில், தமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
மக்களவையில் இந்தியாவில் உள்ள போலி பொறியியல் கல்லூரிகள் குறித்து அதிமுக எம்பி நாகராஜன் மற்றும் பாஜக எம்.பிக்கள் லக்ஷ்மண் கிலுவா மற்றும் ரமாதேவி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சத்யா பால் சிங் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை வழங்கும் 277 போலி கல்லூரிகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டார்.
அதில், 66 போலி பொறியியல் கல்லூரிகளுடன் டெல்லி முதலிடத்திலும், 35 போலி பொறியியல் கல்லூரிகளுடன் தெலுங்கானா இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேற்கு வங்காளம் 27 போலி பொறியியல் கல்லூரிகளுடன் 3 வது இடத்தில் உள்ளது.
இதேபோல், கர்நாடகாவில் 23 போலி பொறியியல் கல்லூரிகளும், உத்தரபிரதேசத்தில் 22 போலி கல்லூரிகளும், அரியானாவில் 18 போலி கல்லூரிகளும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அதன் வலைத்தளத்தில் 24 போலி பல்கலைக் கழகங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது குறித்தும் அமைச்சர் சுட்டி காட்டினார். இதிலும் அதிக போலி பல்கலைக்கழகங்களுடன் டெல்லியே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும் -
ரயில் டிக்கெட் புக்கிங்.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்! இனி ஒரே நொடியில் எல்லாமே முடியும் -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
இந்திய எல்பிஜி கப்பல்களை அனுமதித்த ஈரான்.. இந்தியாவின் பவர் இதுதாங்க! சைலண்ட் சம்பவம் -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு












Click it and Unblock the Notifications