ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும்.. டெல்லி 11 பேர் மரணத்தில் அவிழாத முடிச்சு
11 பேர் தற்கொலை வழக்கில் ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும் என்று டைரியில் எழுதி வைத்திருந்தனர்.
Recommended Video

டெல்லி: 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும் என்று டைரியில் எழுதி வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
டெல்லியில் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
11 பேரின் சடலங்களை கைப்பற்றிய போலீஸார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குறிப்புகள்
அந்த வீட்டின் பூஜை அறையில் ஒரு டைரியை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். அதில் எந்த நாளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி தற்கொலை செய்து கொள்வது உள்ளிட்ட குறிப்புகள் எழுதியிருந்தன.

பூஜை செய்தல்
கண்களையும், வாயையும் கட்டிக் கொண்டால் தூக்கிலிட்டுக் கொள்ளும் போது வலி தெரியாது என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அனைவரும் பாத் பூஜை செய்துள்ளனர். அதாவது ஆலமர விழுதுகள் போல் தொங்க வேண்டும் என்பதுதான் அந்த பூஜை.

மாந்த்ரீகர்கள்
இதை அனைவரும் உறுதிமொழியாகவே எழுதி வைத்திருந்துள்ளனர். மேலும் கடவுளை பார்க்கவே இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதியிருந்தது. இந்த அமானுஷ்ய கடிதம் சிக்கியதால் போலீஸார் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். இதை மாந்த்ரீகர்கள் யாரேனும் சொல்லி இவர்கள் செய்தனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் சைலன்ட் மோட்
இதனிடையே அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கைகள் வந்துள்ளன. அதில் 11 பேரும் எந்தவித போராட்டமுமின்றி அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த டைரியில் இறைவனை பார்க்க போவதற்கு முன்பு யாரும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று எழுதியிருந்ததால் 6 செல்போன்கள் சைலன்ட் மோடில் வைத்து ஒரு கவரில் சுற்றப்பட்டு அலமாரியில் இருந்தன.

உணவு அருந்துதல்
இவர்களுக்குள் உயிரிழந்த பிரியங்காவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஷாப்பிங் செல்வது குறித்து தனது உறவினருடன் இறப்பதற்கு முன்பு பிரியங்கா பேசியுள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது குடும்பத்தினர் அனைவரும் 10.40 மணிக்கு உணவருந்தியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications