மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
அமராவதி: ஆந்தர மாநிலத்தில் சினிமா பாணியில் திருமண மண்டபத்தில் நுழைந்து மணப்பெண்ணை அவரது பெற்றோரே கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் காதல் திருமணங்களுக்கு இப்போதும் எதிர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலித்தால் எதிர்ப்பு ரொம்பவே அதிகமாக வருகிறது.

பெற்றோரே கூட தங்கள் பிள்ளைகளின் காதலை ஏற்பதில்லை. சில நேரங்களில் இவை எல்லை மீறி போய் அடிதடி, ஆணவ கொலை வரை கூட செல்கிறது. அப்படியொரு சம்பவம் தான் ஆந்திர பிரதேசத்தில் நடந்துள்ளது.
கடத்தல் முயற்சி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் மணப்பெண்ணின் குடும்பத்தினரே அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றுள்ளனர். மண்டபத்திற்குள் நுழைந்த அவர்கள், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றுள்ளனர்.
மண்டபத்தில் இருந்தவர்கள் இதை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள் கடத்தலை தடுக்க முயன்ற போது, மணப்பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் மீது மிளகாய் பொடியை வீசியுள்ளனர். இதனால் அங்கே ஒரே கூச்சல் குழப்பம், தள்ளுமுள்ளு என்று குழப்பமான காட்சிகள் காணப்பட்டன.
சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
என்ன நடந்தது: மணமகள் சினேகா என்பவரை வலுகட்டாயமாக மிரட்டி கூட்டி செல்ல அவரது தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் முயன்றுள்ளனர். அவர்களுடன் செல்ல சினேகா மறுத்துள்ளார். இருப்பினும் அவரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடையம் பகுதியில் வசிப்பவர் தான் சினேகா.. அதே பகுதியை சேர்ந்தவர் பட்டின வெங்கடானந்து.. இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், அது பின்னர் காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதலை வெங்கடானந்து குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். இருப்பினும், சினேகாவின் குடும்பத்தினர் அவர்கள் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ள சினேகா முடிவு செய்துள்ளார்.
மிளகாய் பொடி: அதன்படி அவர்களுக்கு மண்டபத்தில் திருமணமும் நடந்துள்ளது. திருமணம் பிரச்சினை இல்லாமல் முடிந்ததால் சினேகா மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இருப்பினும், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே சினேகாவை கடத்தி செல்ல அவரது குடும்பத்தினர் முயன்றுள்ளனர். வேன், மிளகாய் பொடி என்று பக்கா பிளான் உடன் தான் கடத்த வந்துள்ளனர்.
எனினும், கடத்தல் முயற்சியை மணமகன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தடுத்துவிட்டனர். இரு தரப்பும் மாறி மாறி மோதிக் கொண்டதால் திருமண மண்டபத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
வழக்குப்பதிவு: இதையடுத்து சினேகாவின் குடும்பத்தினர் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி சினேகாவின் குடும்பத்தினர் மீது இப்போது தாக்குதல், கடத்தல் முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் திடீரென ஏன் இப்படி கடத்தல் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சினிமா பாணியில் நடந்த இந்த கடத்தல் முயற்சியின் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications