சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
அமராவதி: ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கும் நிலையில் பிரபல நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனது ரசிகர்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். படத்தில்தான் பில்டப் என்றால் தேர்தலிலுமா இப்படி என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் வருகிற மே 13-ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.

தற்போதைய சூழலில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. ஆந்திராவை பொருத்தவரை தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஆந்திரா தேர்தல்: தற்போதைய ஆளுங்கட்சியான முதல்வர் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும், பாஜக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பவன் கல்யாணி தனசீனா கட்சி ஆகியவை ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளிலும் 25 மக்களவைத் தொகுதிகளிலும் ஆந்திராவின் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.
பவன் கல்யாண்: அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதியில் 17 இடங்களிலும் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி இரண்டு இடங்களிலும் பாஜக ஆறு இடங்களிலும் போட்டியிடுகிறது. சட்டமன்றத் தேர்தலில் ஜனசேனா கட்சித் தலைவரும் பவர் ஸ்டாருமான நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். வழக்கமாக தனது அரசியல் நிகழ்வுகள் என்றாலும் சரி ரசிகர்களை சந்திப்பது என்றாலும் சரி பிரம்மாண்டமாக கூட்டத்தைக் கூட்டி மாஸ் காட்டி சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வது பவன் கல்யாண் வழக்கம்.
வேட்புமனு தாக்கல்: அந்த வகையில் தற்போதும் அப்படியே செய்திருக்கிறார். பிதாபுரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று நடிகர் பவன் கல்யாண் மனு தாக்கல் செய்தார் . இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மனு தாக்கலுக்கே இப்படி என்றால் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இது போன்று மாஸ் காட்டி சர்ச்சைகளில் சிக்குவது பவன் கல்யாணுக்கு ஒன்றும் புதிதல்ல.
ஹீரோயிசம்: ஏகப்பட்ட கார்களில் பந்தாவாக சினிமாவில் காட்டும் ஹீரோயிசத்தை நிஜத்திலும் செய்து மாஸ் காட்டிய பவன் கல்யாண் கடந்த தேர்தலில் படு தோல்வியை சந்தித்தார். அந்த தேர்தலில் சுமார் 8 தொகுதிகளில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டி போட்ட நிலையில், அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் சில காலம் அரசியலில் சாதுவாக இருந்த பவன் கல்யாண் மீண்டும் சேதுவாக மாறினார்.
காரின் மேல் பயணம்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவின் குண்டூரில் சாலைப் பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்றார். அதற்காக பவன் கல்யாண் ஆந்திராவின் குண்டூரிலுள்ள தன் கட்சித் தொண்டர்களுடன் காரில் சென்றிருக்கிறார். மற்ற அரசியல்வாதிகளைப்போல் காரினுள் அமராமல், காரின் மேற்கூரையில் உட்கார்ந்துகொண்டு, காரின் இருபுறமும் தொண்டர்கள் நிற்க, பவன் கல்யாண் சென்றார். இதனால் அவர் மீது வழக்கும் பாய்ந்தது.
சர்ச்சை நாயகன்: இதேபோல் அமராவதி அடுத்த மங்களகிரியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது திடீரென்று தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்பை உயர்த்தி காட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு மற்ற கட்சிகளிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு பேக்கேஜ் அடிப்படையில் கட்சி நடத்துகிறேன் என்பவர்களை செருப்பால் அடிப்பேன் என்று கூறினார். இப்படியாக பல அதிரடிகளை அரசியலில் பல அதிரடி ஆக்சன் காட்சிகளை அரங்கேற்றிய பவன் கல்யாண் இந்த தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications