Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகள் சட்டம்: திரும்பப் பெறும் நடைமுறைகள் என்ன? விரிவான விளக்கம்

Subscribe to Oneindia Tamil
Farm law repealed:What will happen next?
BBC
Farm law repealed:What will happen next?

இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அது அமலுக்கு வரும். அதுவே அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமானால், அதற்கும் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்ன?

இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, விவசாயிகளின் தொடர் போராட்டங்களை மீறி அந்த சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தெரிவித்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக, அந்த சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதி சர்ச்சைக்குரியதாக கருதப்படும் அந்த மூன்று சட்டங்களை நிறுத்தும் நடைமுறைகள் இந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார்.

அத்தகைய ஒரு நடைமுறையை மேற்கொள்வதென்றால் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே விவரிக்கிறோம்.

மத்திய அரசு ஒரு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த எத்தகைய நடைமுறைகளை மேற்கொள்கிறதோ அதே நடைமுறையைத்தான் அந்த குறிப்பிட்ட சட்டத்தைத் திரும்பப் பெறும் நடைமுறையை தொடங்கும்போதும் மேற்கொள்ள வேண்டும்.

மக்களவைச் செயலக குறிப்பின்படி, "சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருப்பதைப் போலவே, சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரமும் அதற்கு உண்டு. நாடாளுமன்றத்தின் செயல்திறன் அதாவது அதன் பெரும்பான்மையை பொறுத்தே அமையும்.

பெரும்பான்மை பலம் இல்லாவிட்டால், அந்த சட்டத்தை திரும்பப் பெறும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லாததாக கருதப்படும்.

முந்தைய சட்டங்களை ரத்து செய்வதற்கான அதிகாரத்துக்கு எந்த அரசியலமைப்புத் தடைகளும் கிடையாது. ஆனால் அது மிக அவசியமான நோக்கத்துக்காகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

https://www.youtube.com/watch?v=eIa6NC2Hbk0

இத்தகைய சட்டத்தை திரும்பப் பெறும் முன்மொழியை அரசாங்கமே அதன் தரப்பில் இருந்து முன்மொழிய வேண்டும். சட்டத்தை ஏன் ரத்து செய்கிறோம், ஏன் அது அமல்படுத்தப்பட முடியாமல் போகிறது என்ற விவரம் அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=U6GshW0fYDc

இப்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அதற்கு வகை செய்யும் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்மொழிய வேண்டும் என்கிறார் மக்களவை முன்னாள் செகரட்டரி ஜெனரல் பிடிடீ ஆச்சார்யா. இதை தனித்தனி மசோதாக்களாகவோ அல்லது ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதால் ஒரே மசோதாவாகவோ மத்திய அரசு அறிமுகப்படுத்தி திரும்பப் பெறும் தீர்மானத்தை முன்மொழியலாம். அநேகமாக அது குரல் வாக்கெடுப்பு மூலமாகவே அவையின் பெரும்பான்மை பலத்தைப் பெற்று திரும்பப் பெறலாம்.

இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தாலும், நடைமுறையில் அவை செயல்பாட்டுக்கு வரவில்லை. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தில் மட்டுமே அவற்றை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அதற்கு வெளியே மத்திய அரசு வெளியிடும் எந்தவொரு அறிவிப்பும் சட்ட அந்தஸ்தைப் பெறாது என்பதே நிபுணர்களின் கருத்து.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

நாடாளுமன்றத்தின் அதிகாரம் அரசியலமைப்பின் கீழ் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு சமம்,\" விளக்கினார் முன்னாள் மத்திய சட்ட செயலாளர் பிகே மல்ஹோத்ரா. ","tn":"text"},{"tn":"br"},{"value":"மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை அரசாங்கம் கொண்டு வர வேண்டும். "வேறு வழியில்லை" என்று லோக்சபா முன்னாள் பொதுச்செயலாளர் பி டி டி ஆச்சார்யா கூறினார். ","tn":"text"},{"tn":"br"},{"value":"ஒரு கேள்விக்கு பதிலளித்த ஆச்சார்யா, மூன்று சட்டங்களை ஒரே ரத்து மசோதா மூலம் அரசாங்கம் ரத்து செய்ய முடியும் என்றார். ","tn":"text"},{"tn":"br"},{"value":"பொருட்களின் அறிக்கை மற்றும் மசோதாவின் காரணங்களில், அரசாங்கம் அதை ரத்து செய்ய விரும்புவதற்கான காரணங்களைக் குறிப்பிடலாம். மூன்று சட்டங்கள், என்றார். ","tn":"text"},{"tn":"br"},{"value":" \"ஒரு ரத்து மசோதா நிறைவேற்றப்படும் போது, ​​அதுவும் ஒரு சட்டமாகும்,\" என்று மல்ஹோத்ரா குறிப்பிட்டார். ","tn":"text"},{"tn":"br"},{"value":" மூன்று விவசாயச் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை, ஆனால் அவை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் என்பதுதான் உண்மை. குடியரசுத் தலைவரின் ஒப்புதல், நாடாளுமன்றத்தால் மட்டுமே அவற்றை ரத்து செய்ய முடியும் என்று மல்ஹோத்ரா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+