டெல்லியில் இன்று விவசாயிகளின் மாபெரும் போராட்டம்.. நாடாளுமன்றத்தை முற்றுகையிட திட்டம்
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர்.
டெல்லி: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பினர் நடத்தவுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும் போராட்டங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் அங்கிருந்து சென்னை திரும்பினர்.

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமரை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால் சென்னை திரும்பினர்.
இந்நிலையில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பது, உற்பத்தி விலையில் 50 சதவீத விலை நிர்யணம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இன்று டெல்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
இதற்காக தமிழகத்திலிருந்து அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் என ஏராளமானோர் அங்கு திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட உள்ளனர்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications