பழைய ரூ500 நோட்டுகள் மூலம் விதைகளை வாங்கலாம்... விவசாயிகளுக்கு சலுகை அறிவிப்பு!
விவசாயிகள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விதைகளை வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: விவசாயிகள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விதைகளை வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதற்கு பதில் மக்கள் வைத்திருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் 11 ஆம் தேதி முதல் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தது.

புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் அதிகரித்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.10 நாட்களுக்கு மேலாகியும் மக்களின் பணப்பிரச்சனை இதுவரை தீரவில்லை.
இதைத்தொடர்ந்து மின் வாரியம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்க மத்திய அரசு ஆணையிட்டது. சுங்கச்சாவடிகளிலும் தற்காலிகமாக கட்டணத்தை ரத்து செய்துள்ளது.இந்நிலையில் தற்போது விவசாயிகளுக்கும் அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி விவசாயிகள் தங்களின் பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து விதைகளை வாங்கிக்கொள்ளலாம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தேசிய, மாநில விதை மையங்கள், வேளாண் மையங்கள், பொதுத்துறை கழகங்களில் விவசாயிகள் பழைய 500 ரூபாயை கொடுத்து விதைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் அடையாள அட்டையை காண்பித்து பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications