முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்பு போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி: நிதி ஆயுக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வரவுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்திக்கவுள்ளதால் அவர் முன்னிலையில் தங்களது 40 நாள்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
வறட்சி நிவாரணத்தை அதிகரித்து வழங்குதல், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய அரசு செவி சாய்க்காததால் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்த வரும் 25இல் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழகத்தில் 25ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சி கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்துக்கு முன்பாக விவசாயிகளை சந்திக்க உள்ளார்.
அப்போது அவர் முன்பு தங்களது 40 நாள்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்தில் 25ஆம்தேதி நடைபெறும் முழு கடை அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவும் தீர்மானித்துள்ளனர்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications