பீகாரில் மோடியின் கூட்டத்திற்காக பயிர்களை அறுத்து நிலத்தை அளிக்க விவசாயிகள் எதிர்ப்பு
பாட்னா: பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக தங்களின் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்து நிலங்களை அளிக்க பீகார் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூரில் வரும் 12ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அவரது கூட்டம் நடக்கும் இடம் 40 விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலம்.
இந்நிலையில் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுல்தான்பூர் சென்று மோடியின் கூட்டம் இங்கு நடக்க உள்ளதால் உங்கள் நிலங்களில் இருக்கும் பயிர்களை அறுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

எங்களின் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயாராக இல்லை. மோடியின் கூட்டத்திற்காக நாங்கள் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்ய மாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நீங்கள் பயிர்களை அறுவடை செய்யுங்கள் நாங்கள் இழப்பீடு வழங்குகிறோம் என்று அதிகாரிகள் கூறியும் விவசாயிகள் கேட்கவில்லை.
பயிர்களை அறுவடை செய்தே தீர வேண்டும் என்று வற்புறுத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்,
எங்கள் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்யவிட மாட்டோம். அவர்கள் எங்களுக்கு 5 மடங்கு இழப்பீடு வழங்கினாலும் முன்கூட்டியே பயிர்களை அறுவடை செய்ய விட மாட்டோம் என்றார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications