லூடோ விளையாட்டில் ஏமாத்திட்டாரு.. அப்பா என அழைக்க பிடிக்கவில்லை.. கோர்ட்டுக்கு வந்த மகள்

Subscribe to Oneindia Tamil

போபால்: லூடோ விளையாட்டில் தன்னை தந்தை ஏமாற்றியதாக கூறி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அவரது மகள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஆன்லைன் கேம்களின் தாக்கம் பெரியவர்கள், குழந்தைகளிடத்தில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருப்பதால் ஆன்லைன் கேம்களில் நாட்டத்துடன் உள்ளனர்.

அது போல் விளையாடப்படும் ஒரு விளையாட்டு லூடோ கிங். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் இந்த விளையாட்டை டவுன்லோடு செய்து விளையாடுகிறார்கள்.

லூடோ கேம்

லூடோ கேம்

ஏற்கெனவே இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இந்தியாவில் பெண் ஒருவர் தொடர்ந்து கணவனை லூடோ கேமில் தோற்கடித்தார். இதனால் இரவு முழுக்க அந்த கணவர், மனைவியை சித்திரவதை செய்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போல் கேம் விளையாடும் போது தொந்தரவு செய்த நண்பர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவமும் நடந்துள்ளது.

அடிமை

அடிமை

மேலும் லூடோ விளையாட்டில் தன்னை அக்காள் சேர்த்து கொள்ளவில்லை என போலீஸில் புகார் கொடுத்த அதிர்ச்சி சம்பவமும் நடந்தேறியது. இதை பார்க்கும் போது இந்த ஆன்லைன் விளையாட்டிற்கு எப்படி முட்டாள்தனமாக அடிமையாகியுள்ளனர் என்பது கண்கூடாக தெரிகிறது.

அப்பா

அப்பா

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் போபால் குடும்ப நீதிமன்றத்திற்கு வந்தார். அங்கு அவரை அப்பா என்று அழைக்கவே நான் விரும்பவில்லை என்றார். நீதிபதிகள் காரணத்தை கேட்ட போது நான் எனது தந்தையை மிகவும் நம்புகிறேன். ஆனால் அவர் லூடோ விளையாட்டில் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் இப்படி செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. என வழக்கு தொடர்ந்துள்ளார்.

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை

சாதாரண ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வியை கூட பொறுத்துக் கொள்ளாத அளவிற்கு சகிப்புத்தன்மை இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து அந்த பெண்ணிற்கு உளவியல் கவுன்சலிங் கொடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அவருக்கு 4 முறை கவுன்சலிங் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தெளிவாக இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+