For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பத்தின் தந்தை.. பிரபல விஞ்ஞானி லால்ஜி சிங் மரணம்!

பிரபல விஞ்ஞானி லால்ஜி சிங் காலமானார். அவருக்கு வயது 70

Google Oneindia Tamil News

லக்னோ: பிரபல விஞ்ஞானி லால்ஜி சிங் நெஞ்சுவலியால் சிகிச்சைப்பலனின்றி காலமானார். அவருக்கு வயது 70

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கல்வாரி கிராமத்தை சேர்ந்தவர் லால்ஜி சிங். 70 வயதான இவர் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இந்திய டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர் லால்ஜி சிங்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் 25வது துணைவேந்தராக பணியாற்றினார். நேற்று டெல்லி செல்வதற்காக லால்ஜி சிங், விமான நிலையத்திற்கு வந்தார்.

சுந்தர்லால் மருத்துவமனை

சுந்தர்லால் மருத்துவமனை

அப்போது அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் உள்ள சுந்தர் லால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

லால்ஜிசிங் மரணம்

லால்ஜிசிங் மரணம்

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவத்து வருகின்றனர்.

டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பம்

டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பம்

டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, எம்எஸ்சி மற்றும் பிஹெச்டி ஆகிய படிப்புகளை படித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர்

பத்மஸ்ரீ விருது பெற்றவர்

விஞ்ஞானி லால்ஜிசிங்கின் மறைவுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். 70 வயதில் மரணமடைந்துள்ள லால்ஜி சிங் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lalji Singh, ‘father of DNA fingerprinting in India,’ passed away. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath condoled for Lalji Singh’s death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X