Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமனார்னு கூட யோசிக்கல.. மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து.. மீண்டும் வெளிவந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகாத நிலையில், காவல்துறை இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. இந்நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளிவந்து கூடுதல் பரபரப்பை அந்த பகுதியில் ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது உத்தரப் பிரதேச மாநிலத்தில்?

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதி ஷகீல் - ஷபனா.. 55 வயது தொழிலதிபரான ஷகீலுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.. இவர் தன்னுடைய 17 வயது மகனுக்கு, பக்கத்திலுள்ள கிராமங்களில் பெண் தேடி வந்தார்.. அதில் ஒரு பெண்ணை தேடிப்பிடித்து, தன் 17 வயது மகனுக்கு நிச்சயமும் செய்து வைத்தார்..

uttar pradesh father in law fiance

திடீர் நிச்சயம்

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அப்பாவின் செல்போனை, 17 வயது மகன் எடுத்து பார்த்தபோது, தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், அப்பா ஆபாசமாக பேசியிருந்த, வீடியோ, ஆடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. இனி அந்த பெண்ணை தான் திருமணம் செய்ய முடியாது என்றும் சொல்லிவிட்டார்.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத நிலையில், மகனுக்கு நிச்சயித்த அந்த பெண்ணையே ஷகீல் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றார். இதைப்பார்த்ததுமே, ஷகீலின் மனைவி ஷபனா அதிர்ச்சி அடைந்து, கணவர் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் தந்துள்ளார். இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

அடிக்கடி வீடியோகால்

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஷகீலின் மனைவி ஷபானா செய்தியாளர்களிடம் பேசும்போது, "என்னுடைய கணவர், யாரோ ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் அடிக்கடி பேசிக் கொண்டேயிருந்தார்.. பிறகு நாளெல்லாம் வீடியோவில் பேசிக் கொண்டிருந்தார்.. நானும், என் மகனும் சேர்ந்து 2 முறை கையும் களவுமாக பிடித்து கேட்டதற்கு, எங்களை கடுமையாக தாக்கினார்.. வீட்டிலிருந்து ரூ.2 லட்சம் பணம், 17 கிராம் தங்கத்தை எடுத்து சென்று அந்த பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார்" என்று கூறியிருந்தார்.

நிதி நெருக்கடி

இந்த சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 55 வயது ஷகீலுக்கு 6 பிள்ளைகள் மற்றும் 3 பேரக்குழந்தைகள் இருக்கிறார்களாம்.. திடீரென யாரிடமும் ஆலோசிக்காமல் 17 வயது மகனுக்கு, 22 வயது பெண்ணை நிச்சயித்துவிட்டார் ஷகீல்..

மகனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்றும் குடும்பத்தில் பண நெருக்கடி உள்ளதால், இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றும் அனைவருமே சொல்லி உள்ளனர்.. ஆனால், ஷகீல் யாருடைய பேச்சையும் கேட்கவில்லையாம்.. நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து, வருங்கால மருமகளிடம் போனில் பேசி கொண்டேயிருந்துள்ளார்..

சமாளித்த ஷகீல்

இது தொடர்பாக குடும்பத்தினர் ஷகீலிடம் கேட்டதற்கு, கல்யாண விஷயம் பேசுவதாக சொல்லி சமாளித்து வந்துள்ளார்.. பிறகு, பிசினஸ் விஷயமாக டெல்லி செல்வதாக சொல்லிவிட்டு, வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார்.. சில நாட்கள் கழித்து, மனைவிக்கு போன் செய்து, மகனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துகொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு ஷகீல் மனைவி அதிர்ச்சி அடைந்தாலும், உடனே போலீசுக்கு செல்லவில்லை.. புகாரும் தரவில்லையாம்.. உறவினர்கள் மூலம்தான் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது.. அதற்கு பிறகே போலீசுக்கு சென்றுள்ளார் ஷகீலின் மனைவி.

இது குறித்து ஷகீலின் 17 வயது மகன் சொல்லும்போது, "என்னுடைய பாட்டி மற்றும் தாத்தா இருவருமே, என்னுடைய அப்பாவுக்கு முழு ஆதரவாக இருக்கிறார்கள்.. அவர்கள் என் அப்பாவை கண்டிக்கவேயில்லை. அடிக்கடி அப்பா போனில் பேசியது, எனக்கு நிச்சயம் செய்த பெண்தான் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதை என் அம்மாவிடமும் சொன்னேன். ஆனால் அவர் அதை நம்பவேயில்லை.. இதற்கு பிறகுதான், அம்மாவுக்கும் சந்தேகம் வந்தது.. நானும், அம்மாவும் சேர்ந்து, வீடியோ கால் , ஆடியோ மெசேஜ் ஆதாரங்களை திரட்டினோம்.. இதுகுறித்து கேட்டதற்குதான் எங்களை அப்பா, கடுமையாக தாக்கிவிட்டார்.. ஆனால், எனக்கு பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்று யாருமே, எதிர்பார்க்கவேயில்லை" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+