திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் மகளை கொன்ற தந்தை.. கேரளாவில் ஆணவ படுகொலை
Recommended Video

திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் கேரளாவை சேர்ந்த ஆதிரா என்ற பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து இருக்கிறார்.
திருவனந்தபுரம்: திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் கேரளாவை சேர்ந்த ஆதிரா என்ற பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து இருக்கிறார்.
இந்த சம்பவம் காரணமாக ஆதிராவின் தந்தை ராஜன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆதிராவும், அதே பகுதியை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரும் 2 வருடமாக காதலித்து வருகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் இன்று காலை திருமணம் நடக்க இருந்தது. ஆனால் நேற்று நாடு இரவில் ஆதிரா அவரது தந்தையால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

ஒப்புக்கொள்ளவில்லை
முதலில் ஆதிராவின் காதலுக்கு ராஜன் ஒப்புக்கொள்ளவில்லை. மாப்பிள்ளை ராணுவ வீரராக இருந்தாலும், தலித் என்பதால் கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று பேசி இருக்கிறார். மாப்பிள்ளையின் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்டும் கூட கொடுக்க மாட்டேன் என்று சண்டை போட்டு இருக்கிறார்.

ஒப்புக்கொண்டார்
ஆனால் சில நாட்களுக்கு பின் ஆதிராவின் உறவினர்கள் பேசியதன் பேரிலும், ஆதிராவின் அம்மா பேசியதின் பேரிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு திருமணத்தில் எந்த விஷயமும், சம்பிரதாயமும் செய்ய மாட்டேன், திருமணத்திற்கு பின் மாப்பிள்ளை என் வீட்டிற்கு வர கூடாது என்று நிறைய நிபந்தனைகள் விதித்துள்ளார்.

பெரிய சண்டை
இந்த நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் 8 மணி நேரத்திற்கு முன் ஆதிராவை கூப்பிட்டு தனியாக பேசியுள்ளார் ராஜன். அப்போது ராஜனுக்கும் ஆதிராவிற்கும் எதோ சண்டை வந்துள்ளது. ஆதிராவை மோசமாக தாக்கி அடித்துள்ளார். பின் கத்தியால் 8க்கும் அதிகமான முறை குத்தியுள்ளார்.

கைது
இதனால் அந்த பெண் அந்த இடத்திலேயே மயங்கி உயிருக்கு போராடி உள்ளார். உறவினர்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆதிரா மரணம் அடைந்துவிட்டார். தற்போது ராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications