பணத்துக்காக பிஞ்சு குழந்தைகளை அப்பா- மகனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்- ஹைதராபாத்தில் பயங்கரம்!!
ஹைதராபாத்தில் பணத்துக்காக பெற்ற பிஞ்சு குழந்தைகளை அப்பா- மகனுக்கு தாய் ஒருவர் பலாத்காரம் செய்ய அனுமதித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தாயின் ஒப்புதலுடன் இரட்டையர் சிறுமிகளை பலாத்காரம் செய்த தந்தை மற்றும் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இரட்டை சிறுமிகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-, வகுப்பு படித்து வருகின்றனர். அவர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 40 வயதான ஜாஃபர் என்பவரும் 18 வயதை கூட எட்டாத அவரது மகனும் சிறுமிகளை மிரட்டி ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதில் கூடுதல் அதிர்ச்சியாக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய அவர்களின் அம்மாவே பணம் பெற்றுக்கொண்டு ஆதரவு தந்துள்ளார். வெளியே கூறினால் கொன்று விடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
உயிருக்கு பயந்த சிறுமிகள் நடப்பதை வெளியே கூறாமால் தவித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல் அப்பா- மகனின் தொல்லையை தாங்க முடியாத ஒரு சிறுமி தனது வகுப்பாசிரியையிடம் கூறி கதறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை தனது குழந்தைகள் உரிமை தொண்டு நிறுவனத்தின் மூலம் ஷம்ஷாபாத் போலிஸ் கமிஷனரிடம் விவகாரத்தை கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து சிறுமிகளிடம் விசாரித்த காவல்துறையினர் பணத்திற்காக அம்மாவே தான் பெற்ற குழந்தைகளை பக்கத்து வீட்டுகாரர்களுக்கு விருந்தாக்கியதை உறுதிசெய்தனர்.
தந்தை மகன் மற்றும் சிறுமிகளின் தாய் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், சிறுவனை குழந்தைகள் நல காப்பகத்துக்கு அனுப்பி விட்டு இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications