Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் வெற்றிகள் முதல் மீனவர் விடுதலை வரை... பாஜக வளர்ச்சியால் மற்ற கட்சிகள் பீதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அடைந்து வரும் வெற்றிகள் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு மட்டுமின்றி பல மாநில கட்சிகளுக்கும் தங்கள் எதிர்காலம் குறித்த பீதியை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் வெற்றிகள் மட்டுமின்றி, வெளியுறவு கொள்கைகளிலும் மோடி அரசு சாதித்து காண்பித்து வருவதால் என்ன குறையை சொல்லலாம் என்ற தேடுதல் வேட்டையில் இறங்க வேண்டிய நிலையில் பிற கட்சிகள் உள்ளன.

நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. தேர்தல் முடிந்தால் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதும், ஆண்ட கட்சி அதிகாரத்தை இழப்பதும் சகஜம்தான் என்றாலும் மோடியின் அதிவேக வளர்ச்சியை சாதாரணமான ஜனநாயக நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது.

லோக்சபா தேர்தலில் மட்டுமின்றி அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியையே சந்தித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி தனது அடிப்படை ஆடியதை லோக்சபா தேர்தலில் உணர்ந்தது. ஐக்கிய ஜனதாதளத்தின் நிதிஷ்குமார், பகையாளியாக இருந்த லாலுவுடன் கைகோர்த்து அரசியல் அலையில் இருந்து மீள போராடுகிறார்.

Fear of extinction? Decoding the Panic in Congress and the Rest

மேற்கு வங்கத்தில் பாஜகவை வளர விடக்கூடாது என்றால் இடதுசாரிகளுடன் கைகோர்க்கவும் தயாராகிறார் மம்தா பானர்ஜி. ஏன் இந்த தலைகீழ் மாற்றங்கள் திடீரென நடக்கின்றன? இந்த இயல்புக்கு மாறான மாற்றங்கள்தான் மோடியின் வளர்ச்சியை சாமானியமாக கருத முடியாது என்பதற்கான எச்சரிக்கை மணிகள்.

மோடி அரசுக்கு எதிராக குறை சொல்ல ஏதாவது ஒரு வாய்ப்பை தேடிக் கொண்டுள்ளன பிற கட்சிகள். மோடிக்கு சர்வதேச விவகாரங்களில் அனுபவம் கிடையாது என்பதை விமர்சனமாக வைத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய பிரதமர் ஒருவருக்கு மிகப்பெரிய வரவேற்புகள் கிடைப்பது என்றால் அது மோடிக்கு மட்டுமே. இதனால் என்ன செய்ய என்று தெரியாமல் விழிக்கின்றன எதிர்க்கட்சிகள். சர்வதேச அரங்கில் மோடி ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் தலைவலியாக உருவாகியுள்ளது. இதனால்தான் கூட்டத்திற்கு ஆட்களை கூட்டிச் செல்கிறார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கமென்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க சதுக்கத்தில் மோடி ஆற்றிய உரையாகட்டும், ஆஸ்திரேலியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் கிடைத்த வரவேற்பாகட்டும், ஜி20 நாடுகள் சந்திப்பில் அனைத்து கவனத்தையும் இந்தியா பக்கம் திருப்பியதில் ஆகட்டும், மோடியின் வெளிநாட்டு தோற்றம் பிரம்மிக்க வைக்கிறது. இந்திய விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மானியத்தை நிறுத்த முடியாது என்று பன்னாட்டு சமூகத்திடம் திடமாக அறிவித்தது, இலங்கையில் தூக்கு தண்டனை பெற்ற இந்திய மீனவர்கள் ஐவரை விடுதலை செய்வதில் வெற்றி பெற்றது போன்றவையும் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளன. சமீப காலத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு தலைவர் இவ்வளவு திறமையானவராக இருந்ததில்லை என்கின்றனர் சர்வதேச விவகாரங்களை கவனிக்கும் பத்திரிகையாளர்கள்.

வெளிநாட்டில் மட்டுமல்ல உள்நாட்டிலும் மோடிக்கு சாதகமான வானிலையே நிலவுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்ததன் காரணமாக, டீசல், பெட்ரோல் விலையை குறைக்க முடிந்து, நடுத்தர வர்க்கத்து நன்மதிப்பை பெற்றுள்ளது மோடி அரசு. அதுபோல, உள்நாட்டில் தொழில் தொடங்க தொழிலதிபர்களை ஈர்ப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது மத்திய அரசு.

மத்திய அரசின் தொடர் வெற்றிகள், காங்கிரசுக்கு மட்டுமின்றி பிற கட்சிகளுக்கும் தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. சாரதா சிட் பண்ட் மோசடி புகார், வங்கதேச தீவிரவாதிகளை குண்டு தயாரிக்கும் அளவுக்கு வளர விட்டது போன்ற விவகாரங்கள் மம்தா கழுத்தை நெறுக்கிக் கொண்டுள்ளன. முலாயம்சிங் யாதவை இணைத்துக் கொல்ள லாலு-நிதீஷ் கூட்டணி முயற்சி செய்து கொண்டுள்ளது. மாநில கட்சிகள் எல்லாம், பாஜகவுக்கு எதிராக மதவாதம் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றன, காங்கிரஸ் கட்சி, நேரு, இந்திரா என்று கூறியபடி தனது பழம் பெருமைக்காக வாக்கு கிடைக்கும் என்று நினைக்கிறது.

ஆனால் காங்கிரசோ, மாநில கட்சிகளோ நிதர்சனத்தை புரிந்துகொள்ளவில்லை. இன்றைய தலைமுறையினரின் மன ஓட்டத்தை சரியாக புரிந்து வைத்துள்ளது பாஜக மட்டுமே. ஏனெனில், மதசார்பற்ற தன்மை என்ற கோஷத்துக்கும், பழம் பெருமைக்கும் மக்கள் வாக்களிக்க இப்போது தயாராக இல்லை என்பதை சமீபத்திய தேர்தல்கள் நிரூபித்துக் காண்பித்துள்ளன.

உதாரணத்துக்கு, மாநிலவாதம், பேசிக் கொண்டிருந்த சிவசேனாவை விட தேசியவாதம் பேசிய பாஜகவுக்குதான் மக்கள் அதிக ஆதரவை அளித்துள்ளனர். ஜாதி, மொழி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் அரசியல் செய்வதை பார்த்து மக்கள் வெறுப்பில் உள்ளனர், அவர்களுக்கு தேவை வளர்ச்சி மட்டுமே என்பதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் அனைத்தும் பறைசாற்றுகின்றன.

இப்போது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிய ஜனதாதளம், திரினாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரே அணியில் பாஜகவை எதிர்ப்பது மட்டுமே. இக்கட்சிகளுக்கு உள்ள வாக்கு வங்கி சதவீத அடிப்படையில் அது மட்டுமே பாஜகவின் வெற்றிப் பயணத்தை தடுக்கும் சக்தி மிக்கதாக இப்போதைக்கு இருக்க முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+