கோவா பீச்சில் ரஷ்ய பெண்ணின் ஆடைகளை கிழித்து, தாக்கி நகை பறிப்பு
பனாஜி: கோவா கடற்கரையில் 23 வயது ரஷ்ய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து அவரை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது பிரபல பாகா கடற்கரை. அந்த கடற்கரையில் 23 வயது ரஷ்ய பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளார். அப்போது சிலர் அவரை வழிமறித்து அவரின் கன்னத்தில் அறைந்துள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் ஆடைகளை அவர்கள் கிழித்துவிட்டு அவர் அணிந்திருந்த ரூ.33 ஆயிரம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த ஆண்டு சீசன் துவங்கியதில் இருந்து ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
அண்மை காலமாக கோவா கடற்கரைகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications