தேர்வு எழுதிய போது திடீர் பிரசவ வலி... அழகிய ஆண் குழந்தைக்கு தாயான மாணவி!
ராஞ்சி: ஜார்கண்டில் கல்லூரித் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, தேர்வு அறையிலேயே அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
ஜார்கண்டில் உள்ள கிரிதி மாவட்டத்திலுள்ள தேர்வு மையம் ஒன்றில் பாரதி குமாரி என்ற 21 வயது மாணவி தேர்வு எழுத வந்திருந்தார். இவர் தன்வர் கல்லூரியில் முன்றாமாண்டு மாணவி.
தனது வீட்டிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு ஆட்டோவில் பயணம் செய்து அவர் தேர்வு மையத்திற்கு வந்துள்ளார். தேர்வு தொடங்கும் வரை அவர் சாதாரணமாகவே இருந்துள்ளார்.

ஆனால், சிறிது நேரத்திலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் அளித்தது. ஆனால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு வருவதற்கு முன்னதாக, தேர்வு அறையிலேயே பாரதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இதனைக் கண்டு தேர்வு எழுத வந்திருந்த மற்ற தேர்வர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக தேர்வு கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications