ஹைதராபாத்தில் ரயிலில் சீட் பிடிக்க சண்டை: 2 பேர் பலி, ஒருவர் காயம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவில் ரயிலில் இருக்கை பிடிக்க ஏற்பட்ட தகராறில் இரண்டு பயணிகள் பலியாகினர். மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.

பூரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூரை நேற்று மாலை அடைந்தது. அப்போது பொது பெட்டியில் இருக்கை தொடர்பாக 3 பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில் கிளம்பியும் அவர்களுக்கு இடையேயான பிரச்சனை தீரவில்லை. இந்நிலையில் தகராறு முற்றிப் போய் ஒருவர் மற்ற இருவரை கூடூர் மற்றும் திருப்பதி ரயில் நிலையத்திற்கு இடையே ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டவர்கள் தந்தையும், மகனும் ஆவர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தந்தை ரஹ்மான் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மகன் சுயநினைவின்றி இருக்கிறார். அவர்களை தள்ளிவிட்ட நபர் ரயிலில் இருந்து இறங்குகையில் கீழே விழுந்து பலியானார்.

தந்தை, மகனை அந்த நபர் கீழே தள்ளிவிட்டதை பார்த்த சக பயணிகள் அவரை பிடித்து கேள்வி கேட்டனர். உடனே பயத்தில் அவர் ரயிலில் இருந்து இறங்க முயன்று விழுந்து பலியானார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+